பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கு உதவும் செயலி

பதா­கை­களில் பேருந்து நிறுத்­தம், கழி­வறை போன்ற இடங்­க­ளைக் குறிக்­கும் வாச­கங்­க­ளைப் படித்­துத் தெரிந்­து­கொள்ள பார்­வைத்­தி­றன் குறை­பாடு உள்­ள­வர்­களுக்கு உத­வும் வகை­யில் செயலி ஒன்றை

மாண­வர்­கள் உரு­வாக்கி உள்­ள­னர்.

‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ எனப்

பெய­ரி­டப்­பட்­டுள்ள அந்­தச்

செய­லியை சிங்­கப்­பூர் பார்­வைத்­தி­றன் குறை­பா­டுள்­ளோ­ருக்­கான சங்­கத்­தின் உத­வி­யோடு தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தைச் சேர்ந்த ஒன்­பது மாண­வர்­கள் உரு­வாக்­

கி­னர்.

அச்­செ­ய­லியை உரு­வாக்­கும் பணி­யில் இந்த மாண­வர்­கள் கடந்த ஆண்­டி­லி­ருந்து ஈடு­பட்டு வந்­த­னர்.

“செய­லி­யில் கொடுக்­கப்­பட்­டுள்ள இணைப்பை கிளிக் செய்து கேம­ராவை இயக்கி பதா­கையை நோக்கி குறி­வைக்­க­லாம். அவ்­வாறு செய்­யும்­போது பதா­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள வாச­கத்தை செயலி வாசித்­துக் காட்­டும்,” என்று செய­லியை உரு­வாக்­கிய மாண­வர்­களில் ஒரு­வ­ரும் அக்­கு­ழு­வின் பிர­தி­நி­தி­யு­மான 18 வயது ஜேஸ்­லின் இயோ கூறி­னார்.

பதா­கை­களில் உள்ள சொற்­கள், வாச­கங்­க­ளைப் படிக்க முடி­ய­வில்லை என்று பார்­வைத்­தி­றன் குறை­பாடு உள்­ள­வர்­கள் வருத்­தத்­து­டன் தெரி­வித்­த­தைக் கேட்டு அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் செயலி ஒன்றை உரு­வாக்க வேண்­டும் என்று முனைப்­பு­டன் செயல்­பட்­ட­தாக ஜேஸ்­லி­னின் குழு கூறி­யது.

“பார்­வைத்­தி­றன் குறை­பாடு உள்­ள­வர்­கள் சுய­மா­கச் செயல்­பட விரும்­பு­கின்­ற­னர்.

பதாகைகளில் உள்ள சொற்­

க­ளைத் தங்­க­ளுக்கு வாசித்­துக் காட்­டும்­படி மற்­ற­வர்­க­ளுக்கு அவர்­கள் தொந்­த­ரவு கொடுக்க விரும்­ப­வில்லை.

இதை மன­தில் வைத்­துக்­கொண்டு இந்­தச் செய­லியை நாங்­கள் உரு­வாக்­கி­யுள்­ளோம்,” என்­றார் ஜேஸ்­லின். தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தொழில்சார்ந்த பயிற்சி மன்றத்தின் அனைத்துலக மாணவர் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 16 திட்டங்களில் ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ செயலியும் ஒன்று.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!