தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளலாம்

தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளலாம்

2 mins read
e6f601b4-643a-4baf-a3fc-be317907bc3a
-

தேசிய தின அணி­வ­குப்பு 2022க்கான நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெறு­ப­வர்­க­ளுக்கு இம்­மா­தம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை அது­

கு­றித்து தக­வல் அனுப்­பப்­படும்.

விண்­ணப்­பம் செய்­யும்­போது பதிவு செய்­யப்­பட்ட மின்­னஞ்­சல் முக­வரி மூலம் அவர்­கள் தக­வல் பெறு­வர்.

ndp2022@hapz.com எனும் மின்­னஞ்­சல் முக­வரி மூலம்

மட்­டுமே நுழை­வுச்­சீட்டு குறித்து தக­வல் அனுப்­பப்­படும் என்று அணி­வ­குப்­பின் ஏற்­பாட்­டுக் குழு நேற்று தெரி­வித்­தது.

வேறு மின்­னஞ்­சல் முக­வ­ரி­கள் அல்­லது குறுஞ்­செய்தி போன்ற மற்ற தளங்­கள் மூலம் தக­வல் அனுப்­பப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து 10ஆம் தேதி வரை, அடுத்த மாதம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து 17ஆம் தேதி வரை விண்­ணப்­ப­தா­ரர்­கள் தங்­கள் நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

மின்­னஞ்­சல் மூலம் அவர்­

க­ளுக்­குக் கூடு­தல் விவ­ரங்­கள் அனுப்­பப்­படும். நுழை­வுச்­சீட்­டு­

க­ளைப் பெறும்­போது மின்­னஞ்­சல் மூலம் அனுப்­பி­வைக்­கப்­படும் கியூ­ஆர் குறி­யீட்டை அவர்­கள் காட்ட வேண்­டும்.

மேல் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தேதி­களில் நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­வர்­கள் அவர்­கள் சார்­பாக அவற்­றைப் பெற குடும்ப உறுப்­பி­ன­ரையோ அல்­லது நண்­ப­ரையோ அனுப்­ப­லாம். அதற்க முன்பு அவர்­க­ளி­டம் கியூ­ஆர் குறி­யீடு அனுப்­பப்­பட்ட மின்­னஞ்­சலை அவர்­

க­ளுக்கு மற­வா­மல் அனுப்­பி­விட வேண்­டும்.

கியூ­ஆர் குறி­யீட்­டைப் பயன்­

ப­டுத்தி ஒரு­முறை மட்­டுமே நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

தங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட நுழை­வுச்­சீட்­டு­களை விண்­ணப்­ப­தா­ரர்­கள் ஜூலை மாதம் 17ஆம் தேதிக்­குள் பெற்­றுக்­கொள்­ளா­

வி­டில் அதன்­பி­றகு அவர்­க­ளுக்கு அவை வழங்­கப்­ப­டாது.

அணு­வ­குப்பை நேரில் பார்ப்

­ப­வர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

அல்­லது தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்கீழ் போடப்­படும் தடுப்­பூசி­க­ளைப் போட்­டுக்­கொள்ள மருத்­துவ ரீதி­யில் தகுதி இல்­லா­த­வர்­கள் என்று சான்­றி­தழ் வழங்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

12 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­க­ளாக இருந்­தால் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களும் போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களும் அணி­

வ­குப்பை நேரில் காண­லாம்.

அணி­வ­குப்பு, முன்­னோட்ட நிகழ்ச்­சி­கள் ஆகி­ய­வற்­றுக்­கான நுழை­வுச்­சீட்­டு­களை விற்க அனு­மதி இல்லை. அவ்­வாறு செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அணி­வ­குப்பு தொடர்­பாக மேல் விவ­ரங்­கள் தேவைப்­பட்­டால் அணி­வ­குப்­பின் அதி­கா­ர­பூர்வ இணையப்­பக்­கத்தை நாட­லாம்.

அணி­வ­குப்­புக்­கான நுழை­வுச்­சீட்­டு­கள் குறித்து கருத்­து­கள் அல்­லது பரிந்­து­ரை­கள் தெரி­விக்க விரும்­பு­வோர் ndpeeps@defence.gov.sg எனும் மின்­னஞ்­சல்

முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­க­லாம்.