ஹஜ் யாத்திரை: சிங்கப்பூருக்கு கூடுதல் இடங்கள்

ஹஜ் யாத்திரை: சிங்கப்பூருக்கு கூடுதல் இடங்கள்

1 mins read
dcda614b-fdc6-4a69-94f4-47afe20a5fa0
-

ஹஜ் யாத்­தி­ரை­யில் பங்­கேற்க சிங்­கப்­பூர் முஸ்­லிம்­க­ளுக்கு இவ்­வாண்டு கூடு­தல் இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் சிங்­கப்­பூர் யாத்திரிகர்

களுக்கு எவ்­வ­ளவு இடம் அளிக்­கப்­ப­டு­கிறது என்ற தக­வலை சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) வெளி­யி­ட­வில்லை.

ஹஜ் யாத்­தி­ரை­யில் பங்­கேற்க முன்­ப­திவு செய்­துள்­ள­வர்­க­ளுக்கு இந்­தக் கூடு­தல் இடங்­கள் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கூடு­தல் இடங்­கள் தொடர்­பாக சவூதி அரே­பியா அதி­கா­ரி­ க­ளி­டம் இணைந்து செயல்­ப­டு­வ­தா­க­வும் நிர்­ண­யிக்­கப்­படும் எண்­ணிக்கை கூடிய விரை­வில் தெரி­விக்­கப்­படும் என்­றும் முயிஸ் கூறி­யது.

இதற்கு முன்பு சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 407 பேர் ஹஜ் யாத்­தி­ரை­யில் பங்­கேற்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.