சிங்கப்பூரில் பாலர் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் துணைப்பாட வகுப்புகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆசிரியர்களும் துணைப்பாட வகுப்பு ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
தொடக்கப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயார்ப்
படுத்த சில பெற்றோர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.
வேறு சிலரோ போட்டித்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற பிள்ளைகளிடம் ஒப்பிடும்போது தங்கள் பிள்ளைகள் கல்வி யில் பின்தங்கிவிடக்கூடாது என்ற வேட்கையில் துணைப்பாட வகுப்புகளை நாடுகின்றனர்.
இந்நிலையில், நான்கு வயது குழந்தைகளையும் துணைப்பாட வகுப்பு நிலையங்கள் ஏற்கின்றன. பாலர் பள்ளி மாணவர்
களுக்கான துணைப்பாட வகுப்பு
களுக்கான கட்டணம் $30லிருந்து $100 வரை ஆகும். ஒரு மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களுக்கு வகுப்புகள் நடத்தப்
படுகின்றன.
தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வுக்குத் தங்கள் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே தயார்ப்படுத்த பெற்றோர் சிலர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

