ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி

2 mins read
5752d47d-fc4a-46b1-a175-0b0ce48c0a7d
-

சிங்­கப்­பூ­ரில் ஐந்து வய­துக்­குக் குறை­வான குழந்­தை­க­ளுக்­குக் கொவிட்-19 நோய்க்கு எதி­ரான தடுப்­பூசி செலுத்­து­வது குறித்­துச் சுகா­தார அமைச்­சும் கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான வல்­லு­நர் குழு­வும் ஆராய்ந்­து­ வ­ரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'ஃபைஸர் பையோஎன்­டெக்', 'மொடர்னா' ஆகிய இரு தடுப்­பூ­சி­க­ளின் பாது­காப்பு, சிறு­வர்­க­ளி­டம் இந்த மருந்­து­க­ளின் செயல்­தி­றன் ஆகி­ய­வற்றை ஆய்­வு­செய்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

'மொடர்னா' தடுப்­பூ­சியை ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்­குச் செலுத்­து­வது பற்­றி­யும், 'ஃபைஸர்' தடுப்­பூ­சியை ஆறு மாதங்­கள் முதல் நான்கு வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்­கும் செலுத்­து­வது குறித்து ஆய்வு செய்­யப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வாக அமைப்பு இந்த இரு தடுப்பு மருந்­து­க­ளை­யும் ஆறு மாதக் குழந்­தை­க­ளுக்­கும் பயன்­படுத்­த­லாம் என்று அனு­மதி அளித்த தக­வல் வெளி­யான பிறகு சுகா­தார அமைச்சு இவ்­வாறு கூறி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் இந்­தத் தடுப்­பூ­சி­க­ளைச் சிறா­ருக்­குச் செலுத்­தும் திட்­டம் இந்த வாரம் தொடங்­கும் என்று வெள்ளை மாளிகை தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சிறா­ருக்­குச் செலுத்­து­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்மை, தீமை குறித்து மருந்து உற்­பத்­தி­யா­ள­ரு­டன் இணைந்து ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தா­கச் சுகா­தார அமைச்சு கூறி­யது.

சென்ற ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் 'ஃபைஸர் பையோஎன்­டெக்', 'மொடர்னா' ஆகிய இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்­குச் செலுத்த சிங்­கப்­பூர் அனு­மதி வழங்­கி­யது. ஆனால் மருந்­தின் அளவு பெரி­ய­வர்­க­ளுக்­குச் செலுத்­து­வ­தைப் போன்று மூன்­றில் ஒரு பங்­காக மட்­டுமே இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லு லின் மருத்­து­வக் கல்­லூரி, டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கல்­லூரி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் பல்­வேறு சிறு­வர்­க­ளி­டையே இந்­தத் தடுப்பு மருந்­து­கள் உரு­வாக்­கும் கொவிட்-19 நோய் எதிர்ப்­புச்­சக்தி குறித்த ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ள­னர். மருந்­தின் பக்­க­வி­ளை­வு­கள், செயல்­தி­றன் ஆகி­யவை கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதாகக் கூறப்பட்டது.