இருவழி இலகு ரயில் சேவைக்கு வலியுறுத்து

புக்­கிட் பாஞ்­சாங் இலகு ரயில் சேவையை மீண்­டும் இரு­வ­ழி­க­ளி­லும் விரைந்து தொடங்­க­வேண்­டும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தி­டம் வலி­யு­றுத்தி வரு­வ­தாக புக்­கிட் பாஞ்­சாங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த இரண்­டரை ஆண்­டு­களாக புக்­கிட் பாஞ்­சாங் இலகு ரயில் சேவை போக்­கு­வ­ரத்து உச்­சம் அல்­லாத நேரங்­களில் ஒரு­வ­ழி­யில் மட்­டும் செயல்­ப­டு­கிறது. பய­ணி­கள் இத­னால் பல்வேறு சிர­மங்­க­ளைச் சந்­திப்­ப­தா­கக் கூறு­கின்­ற­னர்.

2019ஆம் ஆண்டு இலகு ரயில்­பாதை புதுப்­பிக்­கப்­ப­டு­வ­தால் தற்­கா­லிக மாற்­றங்­கள் இடம்­பெ­றும் என்று ஆணை­ய­மும் 'எஸ்­எம்­ஆர்டி' நிறு­வ­ன­மும் தெரி­வித்­தி­ருந்­தன.

இந்த மாற்­றங்­கள் 2024ஆம் ஆண்டு வரை நடப்­பில் இருக்­கும் என்று அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் இரு­வ­ழிச் சேவை இல்­லா­த­தால் தாங்­கள் சிர­மப்­ப­டு­வ­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தம்­மைச் சந்­திக்க நேரும்­போ­தெல்­லாம் அடிக்­கடி கவலை தெரி­விப்­ப­தா­கத் திரு லியாங் கூறி­னார். இலகு ரயில் சேவை­யில் அடிக்­கடி இடை­யூ­று­கள் ஏற்­பட்­ட­தால் புதுப்­பிப்­புக்­குத் திட்­ட­மி­டப்­பட்­டது. புதுப்­பிப்­புப் பணி­கள் நிறை­வு­பெற்­றால் புதிய ரயில்­களும் மேம்­ப­டுத்­தப்­பட்ட சமிக்ஞை முறை­யும் சேவை வழங்­கத் தொடங்­கும்.

இது புக்­கிட் பாஞ்­சாங் இலகு ரயில் சேவை­யின் நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரிக்க உத­வும் என்று அதி­கா­ரி­கள் நம்­பு­கின்­ற­னர்.

எனவே இடை­யூ­று­கள் ஏற்­ப­டு­வ­தைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் இரு­வ­ழிச் சேவையை உடனே தொடங்­க­வேண்­டுமா அல்­லது 2024ஆம் ஆண்டு வரை தற்­போ­தைய ஒரு­வ­ழிச் சேவை­யைத் தொட­ர­லாமா என்­பது குறித்து ஆக்­க­க­ர­மான கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற வேண்­டும் என்­றார் திரு லியாங். இருப்­பி­னும் போக்­கு­வ­ரத்­துத் துறை வல்­லு­நர்­க­ளின் அறி­வு­ரைக்­குத் தாம் காத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!