$1.5 பி. உதவித்திட்டம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் $100 பயனீட்டு உதவித் தொகை

$1.5 பி. உதவித்திட்டம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் $100 பயனீட்டு உதவித் தொகை

1 mins read
99e21531-1ad8-49c6-a9f5-bee2b8a2e9ca
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பணவீக்கத்தைச் சமாளிக்க $1.5 பில்லியன் உதவித் திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இத்தொகை குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களுக்கும் உதவ பயன்படுத்தப்படும் என்றார் திரு வோங். இதோடு, இவர்களுக்கு கூடுதலாக $300 மதிப்புடைய ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களும், வருமானம் ஈட்டாத வேலை ஓய்வுபெற்றவர்களும் இதன் மூலம் பயனடைவர்.

மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் $100 பயனீட்டு உதவித் தொகை அளிக்கப்படும்.

நிறுவனங்களுக்கும் உதவிக்கரம் நீட்டப்படும் என்றார் திரு வோங்.

பணவீக்கம் உயரும் சாத்தியம் இருப்பதாகவும் அதற்கு சிங்கப்பூரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.