சிங்கப்பூர் டிசாரு இடையே புதிய படகுச் சேவை

சிங்கப்பூர் டிசாரு இடையே புதிய படகுச் சேவை

1 mins read
a350bef8-2287-49cc-901f-3201a2582953
படம்: டிசாரு கோஸ்ட் மலேசியா இன்ஸ்டாகிராம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவின் டிசாருக்கும் இடையே புதிய படகுச் சேவை அறிமுகம் காணவுள்ளது. இதற்கான ஒப்புதலை கடல்துறை, துறைமுக ஆணையம் வழங்கியுள்ளது.

பாத்தாம் ஃபாஸ்ட் எனும் படகுச் சேவை நிறுவனம் இதற்கான விண்ணப்பத்தை மார்ச் 23ஆம் தேதி அனுப்பியது.

அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதிப்படுத்திய பிறகே, ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இன்னும் சில ஒப்புதல்கள் பெற்ற பின்னரே, புதிய சேவை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.