டாக்ஸி மோதி முதியவர் மரணம்

டாக்ஸி மோதி முதியவர் மரணம்

1 mins read
287ece10-593d-433b-8cb0-317b20c63397
படம்: சின் மின் நாளிதழ் -
multi-img1 of 2

சாலையைக் கடக்கும்போது டாக்ஸி மோதி 61 வயது மாது ஒருவர் மாண்டுள்ளார்.

அங் மோ கியோ ஸ்ட்ரீட் 21ல் நேற்றிரவு 10.25 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. மாது சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் 53 வயது டிரான்ஸ் கேப் நிறுவன டாக்ஸி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சாலையைக் கடக்கும்போது மாது மீது டாக்ஸி மோதியது. சுமார் 20 மீட்டர் தூரம் வரை அவர் டாக்ஸியோடு இழுத்துச்செல்லப்பட்டார் என சின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது. டாக்ஸி திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட டிரான்ஸ் கேப் நிறுவனம், காவல் துறை விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகக் கூறியது.