அரசாங்கம் வழங்கும் நிதி உதவி வளர்ச்சிக்கு உதவும்: பொதுமக்கள், வர்த்தகர்கள் வரவேற்பு

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று அறி­வித்த $1.5 பில்­லி­யன் ஆத­ரவு தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ், அர­சாங்­கம் மூன்று முக்­கிய தரப்­பி­ன­ருக்கு உதவ முற்­ப­டு­கின்­றது. எல்லாக் குடும்­பங்­க­ளுக்­கும் தனி நபர்­க­ளுக்­கும் சிறு வர்த்­த­கங்­க­ளுக்­கும் அர­சாங்­கம் ஒரு சில முக்­கி­யத் திட்­டங்­களை அமல்­ப­டுத்­த­வுள்­ளது. இந்தப் புதிய உதவிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து வந்தது தமிழ் முரசு.

கிராப் வாகன ஓட்­டு­நர் அருள் ஹிலரி, 63, "அர­சாங்­கம் இம்­மா­தி­ரி­யான தொகை யை நமக்குத் தரு­வது எனக்­கும் சக வாடகை வாகன ஓட்­டு­நர்க­ளுக்­கும் பேருதவியாக இருக்கும்.

"முன்­பி­ருந்தே வெவ்­வேறு வழி­களில் நமக்கு உத­வி­வ­ரும் இந்த அர­சாங்­கத் திட்­டங்­க­ளுக்கு நன்­றி­க்க­டன் பட்­டுள்­ளேன்," என்­றார்.

சாங்கி விமான நிலை­யம், சிங்­கப்­பூர்-மலே­சிய எல்லை போன்­றவை திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தால் விலை­வாசி உயர்வு பிரச்­சி­னை­கள் நீண்­ட­கா­லத்­துக்கு நீடிக்­காது என எண்­ணும் அருள், தம்­மைப் போன்ற ஓட்­டு­நர்­க­ளின் நிலைமை நிச்­ச­யம் முன்­னேற்­றம் அடை­யும் என நம்­பு­கி­றார்.

"ஒவ்­வொரு வீட்­டுக்­கும் ஆண்­டுக்கு வெறும் $300 பொருள் சேவை வரித் தொகை, வீட்டு அத்தியாவசியத் தேவை சேவை­க­ளுக்கு $100 என தந்­தால் போதாது. ஒவ்­வொரு மாத­மும், குறிப்­பாக குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு, நிதி உதவி அளித்­தால் இன்­னும் நிலை­யான தீர்­வாக இருக்­க­லாம்," என்­கி­றார் மெக்­டானல்ஸ் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­யும் ஜமினா பானு, 43.

விநி­யோக ஓட்­டு­ந­ரா­கப் பணி­பு­ரி

­ப­வர்­கள் பெரும்­பா­லும் தினமும் $150 வரு­மா­னம் ஈட்­டு­வார்­கள் என தம் சொந்த அனு­ப­வத்­தி­லி­ருந்து பகிர்ந்­து­கொண்­டார் கேப்­ரி­யல் பட்­டிஸ்­டுட்டா, 20.

"இத்­தொகை பல­ருக்­கும் உத­வி­யாக இருக்­கும் என்­பதை மறுக்­க­வில்­லை­யென்­றா­லும் கிராப் போன்ற பெரும் நிறு­வ­னங்­க­ளுக்கு நாம் கூடு­த­லாக சில மணி நேரம் பணி­பு­ரி­யும்­போது அவை நமக்­குத் தரும் ஊக்­கத்­தொகை 150 வெள்­ளி­யை­விட அதி­கம் என்­ப­தைக் கணக்­கில் கொள்ள வேண்­டும்," என்று அவர் கூறி­னார். ஆகை­யால், இத்­தொகை எந்த அள­விற்கு உத­வும் என்­பது ஒரு கேள்­விக்­குறிதான் என அவர் கரு­து­கி­றார்.

'லொம்பா த குர்கா பிஸ்ட்ரோ' எனும் சிறு உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ரான அனுஷ்கா ரணா, 56, "அர­சாங்­கம் சிறு வர்த்­த­கங்­க­ளுக்கு செய்­யும் நிதி உதவி நம் வளர்ச்­சிக்கு மிக முக்­கி­யம்.

"இத்­தொ­கை­யைக் கொண்டு என்­னால் மக்­க­ளுக்கு அதி­கம் தெரிந்த இடத்­தில் உண­வ­கத்­தைத் திறந்து என் வர்த்­த­கத்­தில் முன்­னேற்­றத்­தைக் காண­மு­டி­யும்," என்­றார்.

புக்­கிட் தீமா கடைத்­தொ­கு­தி­யின் நான்­காம் மாடி­யில் துணைப்­பாட நிலை­யங்­கள், பணிப்­பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு அருகே இருக்­கும் தமது உண­வ­கம், முத­லாம் மாடிக்குச் சென்­றால் மற்ற உண­வ­கங்­க­ளோடு சேர்ந்­தி­ருக்­க­லாம் எனக் கூறிய அவர், அவ்வாறு செய்தால் வாடிக்­கை­யா­ளர்­கள் தமது உண­வ­கத்­துக்கு வரும் வாய்ப்­பு­களும் அதி­க­மாக இருக்­கும் என்­றார்.

சிறு விநி­யோக வர்த்­த­க உரி­மை­யா­ள­ரான லுக்­கஸ் இங்­க­ரம், 57, தனி­யா­ளாக நின்று வர்த்­த­கத்தை நடத்­து­வ­தால் ஊழி­யர்­க­ளுக்­காகக் தரப்படும் நிதி உதவி தமக்கு அவ்­வ­ளவு பொருந்­தாது என்றும் இருப்பினும் பிற்­கா­லத்­தில் வர்த்­த­கத்தை விரி­வ­டை­யச் செய்ய விரும்­பி­னால் வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள திட்­டங்­கள் பெரு­ம­ள­வில் உத­வக்­கூ­டும் என்­றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!