80 மின்சார வாகனங்களை பெறும் டிஎச்எல் நிறுவனம்

80 மின்சார வாகனங்களை பெறும் டிஎச்எல் நிறுவனம்

2 mins read
a71fd537-504c-4c5c-b5ce-ffdefc2af297
டிஎச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்துகொண்டார். படம்: டிஎச்எல் எக்ஸ்பிரஸ் -

2050ஆம் ஆண்டிற்குள் கரிமமற்ற நிலையை எட்ட இலக்கு

இவ்­வாண்டு அக்­டோ­ப­ருக்­குள் 'டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ்' தள­வாட நிறு­வ­னத்­தி­டம் கூடு­த­லாக 80 மின்­சார வாக­னங்­கள் இருக்­கும். அதைச் சேர்த்து, இந்­நி­று­வ­னத்­தி­டம் உள்ள மின்­சார வாக­னங்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 90 ஆக உய­ரும். இந்­நி­று­வ­னத்­தி­டம் இங்கு 390 விநி­யோக வாக­னங்­கள் உள்ளன.

கிரீன்­விச் டிரை­வில் உள்ள டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் இந்த அறி­விப்பு வெளி­யா­னது. போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

டிஎச்­எல் நிறு­வ­னத்­தின் அன்றாட பய­ணப் பாதை­களில் 30 விழுக்­காட்டை இந்த மின்­சார வாக­னங்­கள் உள்­ள­டக்­கும்.

"மின்­சார வாக­னங்­க­ளுக்கு மாறு­வ­தன் மூலம், ஆண்­டுக்கு 323 டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் குறைக்­கும்," என்று டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிறிஸ்­த­ஃபர் ஓங் தெரி­வித்­தார்.

முழு­மை­யாக மின்­னூட்­டம் செய்­யப்­பட்ட வாக­னத்­தால் 339 கிலோ­மீட்­டர் தூரம் வரை செல்ல முடி­யும்.

இந்த 80 மின்­சார வாகனங்­களும் 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ ரெண்ட்-ஏ-கார்' நிறு­வ­னத்­து­ட­னான ஐந்து ஆண்­டு­கால குத்­த­கை­யி­லும் பரா­மரிப்பு ஒப்­பந்­தத்­தி­லும் உள்­ளன.

புதிய மின்­சார வாக­னங்­க­ளுக்கு மின்­னூட்ட வச­தி­களை வழங்க, டிஎச்­எல் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் 105 மின்­னூட்­டி­கள் பொருத்­தப்­படும்.

மின்­னூட்ட வச­தி­களை வழங்கும் தனி­யார் நிறு­வ­ன­மான 'இவி­ஓன் சார்­ஜிங்', இந்த 7 கிலோ­வாட் 'ஏசி' மின்­னூட்­டி­களை வழங்கி அவற்­றைப் பொருத்­து­கிறது.

வேக­மான, அதிக எரி­சக்­தி­யைப் பயன்­ப­டுத்­தும் 'டிசி' மின்­னூட்­டி­களுக்­குப் பதி­லாக 'ஏசி' மின்­னூட்­டி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால், டிஎச்­எல் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் அவற்­றைப் பொருத்­து­வ­தற்கு மின்­சார விநி­யோ­கக் கட்­ட­மைப்­புக்­குப் பெரிய அள­வில் மேம்­பாடு தேவை­ இராது.

மூன்று மணி நேரம் மின்­னூட்­டம் செய்­வ­தால் மின்­சார வாக­னத்­தால் கூடு­த­லாக 85 கிலோ­மீட்­டர் தூரம் பய­ணம் செய்ய முடி­யும். மின்­க­லனை முழு­மை­யாக மின்­னூட்­டம் செய்­வ­தற்கு கிட்­டத்­தட்ட 11 மணி நேரம் எடுக்­கும்.

மின்­சார வாக­னங்­க­ளின் மின்­னூட்ட ஆற்­ற­லைப் பரி­சோ­தித்து, அவற்­றைப் பயன்­ப­டுத்­து­வ­தில் அனு­ப­வத்­தைப் பெற, இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் டிஎச்­எல் நிறு­வ­னம் 10 மின்­சார வாக­னங்­க­ளைச் சோதித்துப் பார்த்­தது.

2050க்குள் கரி­மமற்ற நிலையை எட்ட டிஎச்­எல் நிறு­வ­னம் இலக்கு கொண்­டுள்­ளது. மேலும், 2030க்குள் தன் விநி­யோக வாக­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 60 விழுக்­காட்டை மின்­சா­ர­ம­ய­மாக்க டிஎச்­எல் விரும்­பு­கிறது.

கூடு­த­லான வாக­னங்­களை மின்­சா­ர­ம­ய­மாக்­கும் முயற்­சி­யில் சிங்­கப்­பூர் இறங்­கி­யுள்­ளது. 2030க்குள் நாட்­டின் பொதுப் பேருந்து­க­ளின் எண்­ணிக்­கை­யில் பாதி­ அளவு மின்­சா­ர­ம­ய­மாக்­கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அண்­மை­யில் கூறி­ இருந்­தது. மின்­கலங்­களில் இயங்­கும் டாக்­சி­கள், எட்டு ஆண்­டு­களுக்­குப் பதி­லாக 10 ஆண்­டு­கள் பயன்­பாட்­டில் இருக்க அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றன.

வர்த்­தக வாக­னங்­களை வாங்க விரும்­பும் தொழில் நிறு­வ­னங்­கள், வழக்­க­மான வாக­னங்­க­ளுக்­குப் பதி­லாக மின்­சார வாக­னங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றன.