முதன்முறையாக கண்டறியப்பட்ட வண்ணமிகு மாண்டரின் மீன்கள்

முதன்முறையாக கண்டறியப்பட்ட வண்ணமிகு மாண்டரின் மீன்கள்

1 mins read
0af4f151-4314-458d-8ad7-a195fb3d5e32
-

சிங்­கப்­பூ­ரில் வண்­ண­மிகு இரு மாண்­ட­ரின் மீன்­கள் (படம்) முதன்­மு­றை­யாக கண்­ட­றி­யப்­பட்­டு உள்ளன. இந்த மீன் வகை பொது­வாக சிங்­கப்­பூ­ரில் காணப்­ப­டாது. ஆனால் பிலிப்­பீன்ஸ், இந்­தோ­னீ­சி­யா­வின் போர்­னியோ, ஜாவா தீவு­களில் இவை காணப்­ப­ட­லாம்.

இந்த மீன்­கள் மீன் காட்­சி­ய­கத்­தில் இருந்து விடு­விக்­கப்­பட்டு இருக்­க­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் மீன் அறி­வி­ய­லா­ளர்­கள் நேற்று கூறி­னர்.

ஒன்15 மரினா ஆன் செந்­தோ­சா­வில் தாம் முக்­கு­ளிப்­பில் ஈடு­பட்டு இருந்­த­போது இந்த மீன்­களைத் தாம் கண்­ட­தாக மருத்து­வ­மனை பரா­ம­ரிப்பு ஒருங்­கி­ணைப்­பா­ளர் வீனஸ் டான், 49, கூறி­னார்.