சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவைக்கு ஒப்புதல்

சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவைக்கு ஒப்புதல்

1 mins read
e7da7c84-99dc-42e5-a60b-acff1518c62d
'பாத்தாம்ஃபாஸ்ட்' நிறுவனம், மார்ச் 23ஆம் தேதி படகு சேவைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. படம்: டெசாரு கோஸ்ட் மலேசியா/இன்ஸ்டகிராம். -

சிங்­கப்­பூ­ரின் தானா மேரா படகு முனை­யத்­துக்­கும் மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தின் டெசாரு கோஸ்ட் படகு முனை­யத்­துக்­கும் இடையே முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள நேரடி படகுச் சேவை செயல்­பாட்­டிற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டு உள்ளது.

சிங்­கப்­பூர் கடல்­துறை, துறைமுக ஆணை­யம் நேற்று இத­னைத் தெரி­வித்­தது.

'பாத்­தாம்­ஃபாஸ்ட்' நிறு­வ­னம், மார்ச் 23ஆம் தேதி படகு சேவைக்­கான விண்­ணப்­பத்தை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

புதிய படகு பய­ணப் பாதை­யின் பாது­காப்பை மதிப்­பீடு செய்­யு­மாறு 'பாத்­தாம்­ஃபாஸ்ட்' நிறு­வ­னத்­தி­டம் ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டது. பய­ணச் சேவை வழங்­கு­வ­தற்கு பட­கு­கள் தகுதி பெற்­றுள்­ளதை அதி­கா­ரி­கள் சான்­ற­ளிப்­ப­தும் இந்த மதிப்­பீட்­டில் அடங்­கும்.

தானா மேரா, டெசாரு படகு முனை­யங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணப் பாதையை உள்­ள­டக்­கும் அவ­ச­ர­கால பதில் நட­வ­டிக்­கை­யை­யும் 'பாத்­தாம்­ஃபாஸ்ட்' வழங்க வேண்­டும்.

தேவை­யான விவ­ரங்­களை 'பாத்­தாம்­ஃபாஸ்ட்' சமர்ப்­பித்­த­வு­டன், முன்­மொ­ழி­யப்­பட்ட படகுச் சேவைக்­கான பாது­காப்பு விதி­மு­றை­களை 'பாத்­தாம்­ஃபாஸ்ட்' பூர்த்­தி­செய்­ததா என்­பதை ஆணை­யம் மதிப்­பீடு செய்­தது.

முன்­மொ­ழி­யப்­பட்ட படகுச் சேவையை நடத்த 'பாத்­தாம்­ஃபாஸ்ட்' நிறு­வ­னத்­தின் விண்­ணப்­பத்­துக்கு தான் ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தாக 'பாத்­தாம்­ஃபாஸ்ட்', ஜோகூர் துறை­முக ஆணை­யம், மலே­சிய கடல்­துறை ஆகி­ய­வற்­றி­டம் ஆணை­யம் நேற்று தெரி­யப்­படுத்­தி­யது.

புதிய படகுச் சேவை எப்­போது தொடங்­கும் என்­பது, செயல்­பாடு­களைத் தொடங்­கு­வ­தற்­கான 'பாத்தாம்­ஃபாஸ்ட்' நிறு­வ­னத்­தின் இறுதிக்­கட்ட தயா­ரிப்­புப் பணி­களைப் பொறுத்­துள்­ளது.

மற்ற ஆணை­யங்­க­ளி­டம் இருந்து தேவை­யான ஒப்­பு­த­லைப் பெறு­வதும் இந்தப் பணிகளில் அடங்­கும்.