கடந்த வார இறுதியில் (ஜூன் 17 முதல் 19) தினசரி பயணிகளின் எண்ணிக்கை 278,000-ஆக இருந்தது என்றும் இது அதற்கும் முந்திய வார இறுதியுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
அப்போது தினசரி பயணிகளின் எண்ணிக்கை 267,000 ஆக இருந்தது.
ஜூன் மாதப் பள்ளி விடுமுறை தொடங்கிய பிறகு உட்லண்ட்ஸ், துவாஸ் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து தொடர்ந்து நெரிசலாகவே இருப்பதாக ஆணையம் கூறியது.
அண்மைய தினசரி பயணிகள் எண்ணிக்கை விசாக தின வார இறுதியில் இருந்த 224,000-ஐ விட அதிகம். புனித வெள்ளி வார இறுதியில் தினசரிப் பயணிகளின் எண்ணிக்கை 149,000-ஆக இருந்தது.
இம்மாதம், போக்குவரத்து நெரிசல் தொடரும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
போக்குவரத்து நெரிசல், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பப் பயணங்களைத் திட்டமிடும்படி ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

