சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை ஜூலை 7லிருந்து தொடங்க உள்ளது. இந்தப் படகுச் சேவை தானா மேரா படகு முனையத்தையும் ஜோகூரிலுள்ள டெசாரு படகு முனையத்தையும் இணைக்கும்.
இதற்கான கட்டணச் சீட்டுகள் மற்றும் சேவை நேரங்களைப் பற்றிய விவரங்களை டெசாரு கோஸ்ட் இணையப்பக்கம், பாத்தாம் ஈஸ்ட் இணையப்பக்கம் ஆகியவற்றில் காணலாம் என்று தெ ரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு இணையப்பக்கங்கள் மூலம் இம்மாதம் 30 தேதியிலிருந்து கட்டண அட்டைகளை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் ஒரு படகுச் சேவை டெசாரு செ ன்று அங் கிருந்து மீண்டும் சிங் கப்பூர் திரும்பும்,
இதை நேற்று 'டெசாரு கோஸ்ட் டெஸ்டினேஷன் ரிசோர்ட்' என்ற நிறுவனமும் 'டெசாரு லிங்க் ஃபெரி சர்விசஸ்' என்ற நிறுவனமும் தங்களது அறிக்கை மூலம் தெரிவித்தன.
சிங் கப்பூரிலிருந்து டெசாரு செல்ல 90 நிமிடங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், தொடக்கமாக படகில் 330 பேர் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், டெசாரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், கூடுதல் படகுச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிக்கை விளக்கியது.

