தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை: ஜூன் 25ல் சில சாலைகள் மூடல்

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை: ஜூன் 25ல் சில சாலைகள் மூடல்

1 mins read
4f381da4-167f-46ff-ae7d-57e4dc2f09d0
-

தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைக்காக நாளை மறுதினம் (ஜூன் 25) சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மரினா பே மிதக்கும் மேடையில் ஒத்திகை நடைபெறும். அதிகாரம் பெற்ற வாகனங்கள், காவல்துறை மற்றும் அவசரகால வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

துணை காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட சாலைகளில் பணியமர்த்தப்பட்டு வாகனமோட்டிகளுக்கு வழிகாட்டுவர்.

மரினா பே பகுதியில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என்பதால் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.