வளரும் பருவத்தில் உதவி தேவைப்படக்கூடிய சிறார்களுக்கு சிறப்பு ஆதரவு தரும் ஒரு செயல்திட்டம் நடப்புக்கு வந்து இருக்கிறது. அந்தத் திட்டம் பாலர்பள்ளிகளில் அத்தகைய சிறார்களுக்கு அதிக இடங்களை ஒடுக்கித் தரும்.
'எல்லாருக்குமான ஆதரவுச் செயல்திட்டம்' என்று அழைக்கப்படும் அந்தத் திட்டம் 2021ல் தொடங்கப்பட்டது.
அதன்கீழ் அடுத்த மூன்றாண்டுகளில் பாலர்பள்ளிகளில் 100 இடங்கள் உருவாக்கப்படும். சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சுவெலிங் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார்.
இளம்பருவ மேம்பாட்டு முகவை அமைப்பு நடைமுறைப்படுத்தும் அந்தச் செயல் திட்டத்தின் கீழ் இப்போது ஏழு பாலர்பள்ளிகளில் 38 சிறார்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
புதிய செயல்திட்டம் மூன்று முதல் ஆறு வரை வயதுள்ள உடல் வளர்ச்சி உதவி தேவைப்படும் சிறாருக்கு உதவுகிறது.
பாலர்பள்ளி சூழலில் அத்தகைய சிறார்களுக்குத் தேவைப்படும் உதவிகளும் ஆதரவுகளும் பாலர்பள்ளி கல்வியுடன் சேர்த்து முன்னதாகவே கிடைக்க அந்தச் செயல்திட்டம் வகை செய்கிறது.
அமைச்சர் திருவாட்டி சுன், நேற்று உட்லண்ட்சில் இருக்கும் 406 புளோக்கில் அமைந்துள்ள 'மை பர்ஸ்ட் ஸ்கூல்' நிலையத்துக்கு வருகையளித்தார்.

