சோதனைச்சாவடிகளில் மாத இறுதிவரை போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

கடந்த வார­யி­று­தி­யில் உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக பய­ணம் செய்­தோர் எண்­ணிக்கை நாள் ஒன்­றுக்கு 278,000 ஆக அதி­க­ரித்­தது. ஒப்­பு­நோக்க, அதற்கு முந்­தைய வார­யி­று­தி­யில் இந்த எண்­ணிக்கை நாள் ஒன்றுக்கு 267,000 ஆக இருந்­தது. குடி­நுழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் நேற்று இதைத் தெரி­வித்­தது.

விசாக தின வார­யி­று­தி­யில் நாள் ஒன்­றுக்கு 224,000 பேரும் புனித வெள்ளி வார­யி­று­தி­யில் நாள் ஒன்­றுக்கு 149,000 பேரும் பய­ணம் செய்­தி­ருந்­த­னர்.

ஜூன் பள்ளி விடு­முறை தொடங்­கி­ய­தில் இருந்து உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக பய­ணம் செய்­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரு­வ­தாக ஆணை­யம் கூறி­யது.

எனவே, மாத இறு­தி­வரை போக்கு­வ­ரத்து அதி­க­மாக இருக்­கும் என ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது.

"தற்­போ­தைய சூழ­லில் பயணத்தில் தாம­தம் ஏற்­ப­டு­வ­தைப் பயணிகள் எதிர்­பார்க்­க­லாம். போக்கு­வரத்து நெரி­ச­லில் சிக்­கிக்­கொள்­வதைத் தவிர்க்க, முடிந்த அள­விற்கு தங்­கள் பய­ணத் திட்டங்களை மாற்றி அமைத்­துக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படு­கின்­ற­னர்," என்று ஆணை­யம் சொன்­னது.

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வழி­யாக சிங்­கப்­பூ­ரில் இருந்து புறப்­ப­டு­வோர், கார்­கள் செல்­வ­தற்­கான ஜோகூர் குடி­நு­ழை­வுச் சோத­னைச்­சா­வ­டி­கள் ஜூன் 6ஆம் தேதி­மு­தல் புதுப்­பிக்­கப்­பட்டு வரு­வ­தைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்று ஆணை­யம் கூறி­யது. புதுப்­பிக்­கப்­படும் சாவ­டி­கள் செயல்­பாட்டில் இருக்கமாட்டா.

தவிர்க்க வேண்டிய உச்ச நேரங்கள்

குடிநுழைவுச் சோதனையைக் கடக்க கூடுதல் நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுமாறும் கீழ்க்காணும் உச்ச நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது:

சிங்கப்பூரிலிருந்து புறப்படுவது

- சனிக்கிழமை (ஜூன் 25): காலை 6 மணி முதல் 9 மணி வரை, இரவு 9 மணி முதல் 11.59 மணி வரை.

- ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26): காலை 6 மணி முதல் 8 மணி வரை.

சிங்கப்பூருக்கு வருவது

- இன்று (ஜூன் 23), நாளை (ஜூன் 24):

இரவு 10 மணி முதல் 11.59 மணி வரை.

- சனிக்கிழமை (ஜூன் 25):

இரவு 9 மணி முதல் 11.59 மணி வரை.

- ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26):

மாலை 6 மணி முதல் இரவு 11.59 மணி வரை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!