புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி, புதுவகை ஓமிக்ரான் துணைத் திரிபுகளுக்கு எதிராக பாதுகாக்கிறது: மொடர்னா தகவல்

மொடர்னா நிறு­வ­னம், தன் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி, பிஏ.4, பிஏ.5 புதிய ஓமிக்­ரான் துணைத் திரி­பு­களுக்கு எதி­ராக சிறந்த பாது­காப்பை வழங்­கு­வ­தாக தெரி­வித்­து உள்­ளது.

முன்­னோட்­டச் சோத­னை­யில் 800 பேரி­டம் பூஸ்­டர் தடுப்­பூசி செலுத்­தப்­பட்ட ஒரு மாதத்­திற்­குப் பிறகு, கிரு­மியை நடு­நி­லை­யாக்­கும் 'ஆண்­டி­பாடி'கள் ஐந்து மடங்­கிற்கும் அதி­க­மாக உரு­வா­ன­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

"இந்­தத் தரவை ஒழுங்­கு­முறை அமைப்­பு­க­ளி­டம் நாங்­கள் உட­ன­டி­யாக சமர்ப்­பிப்­போம். ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த தலை­முறை பூஸ்­டர் தடுப்­பூ­சியை விநி­யோ­கிக்க நாங்­கள் தயா­ராகி வரு­கி­றோம்," என்று மொடர்னா தலைமை நிர்­வாகி ஸ்டெ­ஃபன் பென்­சல் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

தொடக்­கத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­யை­விட, ஓமிக்­ரா­னுக்கு எதி­ராக தயா­ரிக்­கப்­பட்ட பூஸ்­டர் தடுப்­பூசி வலு­வான நோயெ­திர்ப்­புச் சக்­தியை ஏற்­ப­டுத்­தி­யதை ஜூன் 8ஆம் தேதி மொடர்னா நிறு­வ­னம் வெளி­யிட்ட முன்­னோட்­டப் பரி­சோதனை முடி­வு­கள் காட்­டின.

அண்­மைக்­கா­ல­மாக சிங்­கப்­பூ­ரில் கூடு­த­லா­னோ­ரி­டம் பிஏ.4, பிஏ.5 ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் கண்­ட­றி­யப்­பட்டு வரு­கிறது. இவற்­றின் பர­வல் தொடர்ந்து அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தது. பிஏ.2 துணைத் திரி­பை­விட இத்­த­கைய துணைத் திரி­பு­கள் பர­வ­லாகப் பர­வக்­கூ­டிய ஆற்­ற­லைக் கொண்­டி­ருப்­பதே இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் 7,109 பேரி­டம் கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை பதி­வாகி இருந்த 3,220 தொற்று பாதிப்­பு­ளைவிட இது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். கடந்த வாரம் சமூக அள­வில் பதி­வான கொவிட்-19 பாதிப்­பு­களில், பிஏ.4, பிஏ.5 துணைத் திரி­பு­கள் ஏறக்­குறைய 30 விழுக்­காடு அளவு பங்கு வகித்­தன. ஒப்­பு­நோக்க, அதற்கு முந்­தைய வாரத்­தில் இந்த விகி­தம் 17 விழுக்­கா­டாக இருந்­தது. புது­வகை துணைத் திரி­பு­கள் எவ்­வ­ளவு வேக­மா­கப் பர­வு­கின்­றன என்­பதை இது காட்­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் இந்­தத் துணைத் திரி­பு­கள் கடந்த மாதம் நடுப்­ப­கு­தி­யில்­தான் முதன்­மு­றை­யாக கண்­ட­றி­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்­லது ஆகஸ்ட் மாதம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார். என்­றா­லும், மக்­கள்­தொ­கை­யில் பெரும்­பா­லா­னோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் இம்­முறை கவலை குறை­வாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!