கற்றலில் கண்டுபிடிப்புக்கு நேரம் ஒதுக்குவது முக்கியம்

கற்றலில் கண்டுபிடிப்புக்கு நேரம் ஒதுக்குவது முக்கியம்

1 mins read
cc2b313b-3f5a-4137-aa51-4c9d4d612a6f
-

பட்­டக்­கல்­வியை மேற்­கொள்­ளும் மாண­வர்­கள் கண்­டு­பி­டிப்பு மூலம் கற்­ப­தற்­கும் வேக­மா­கச் சுழ­லும் வேலை­யி­டத்­தின் கடி­னத்­துக்கு அவர்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­து­வ­தற்­கும் நேரத்­தை­யும் இடத்­தை­யும் ஒதுக்­கு­வ­தில் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் சம­நி­லை காண வேண்­டும் என்று தேசிய இளை­யர் மன்­றத் தலைமை நிர்­வாகி டேவிட் சுவா கூறி­யி­ருக்­கி­றார்.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான மன­ந­லக் கருத்­த­ரங்­கில் நேற்று முன்­தி­னம் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ள் இடையே சரா­சரி மன­வு­ளைச்­சல் அளவு 10க்கு 7.6 ஆக இருந்­த­தாக அண்­மைய ஆய்வு ஒன்­றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

தங்­க­ளுக்கு எவை எவை­யெல்­லாம் முக்­கி­ய­மா­னவை என்­பது குறித்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் முடி­வெ­டுக்க வேண்­டும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நல்­வாழ்வு அலு­வ­லக இயக்­கு­நர் ஏதன் பாங் கூறி­னார்.