ஜூலை 7லிருந்து சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை

ஜூலை 7லிருந்து சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை

2 mins read
52dd0f70-47ee-4de8-8cfe-8007e753bf61
டெசாரு கடலோரப் படகு முனையம். படம்: பெர்னாமா -

சிங்­கப்­பூர்-டெசாரு பட­குச் சேவை ஜூலை 7லிருந்து தொடங்க உள்­ளது. இந்­தப் பட­குச் சேவை தானா மேரா படகு முனை­யத்­தை­யும் ஜோகூ­ரி­லுள்ள டெசாரு படகு முனை­யத்­தை­யும் இணைக்­கும்.

இதற்­கான கட்­டணச் சீட்­டு­கள் மற்றும் சேவை நேரங்­களைப் பற்றிய விவரங்களை டெசாரு கோஸ்ட் இணை­யப்­பக்­கம், பாத்­தாம் ஈஸ்ட் இணை­யப்­பக்­கம் ஆகி­ ய­வற்­றில் காண­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த இரு இணை­யப்­பக்­கங்­கள் மூலம் இம்­மா­தம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து கட்­டண அட்­டை­களை வாங்­க­லாம் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. வியா­ழக்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழமை வரை தின­மும் ஒரு பட­குச் சேவை டெசாரு சென்று அங்­கி­ருந்து மீண்­டும் சிங்­கப்­பூர் திரும்­பும்,

இதை நேற்று 'டெசாரு கோஸ்ட் டெஸ்­டி­னே­ஷன் ரிசோர்ட்' என்ற நிறு­வ­ன­மும் 'டெசாரு லிங்க் ஃபெரி சர்­வி­சஸ்' என்ற நிறு­வ­ன­மும் தங்­க­ளது அறிக்கை மூலம் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து டெசாரு செல்ல 90 நிமி­டங்­கள் பிடிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன், தொடக்­க­மாக பட­கில் 330 பேர் செல்­ல­லாம் என்­றும் தெரி­விக்­கப்

­ப­டு­கிறது.

மேலும், டெசாரு செல்­லும் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கு­மா­னால், கூடு­தல் பட­குச் சேவைக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றும் அறிக்கை விளக்­கி­யது.

"இந்­தப் புதிய பட­குச் சேவை டெசாரு கடற்­க­ரைக்கு மேலும் பல அனைத்­து­லக பய­ணி­கள் வந்து போக வழி ஏற்­ப­டுத்­தும்.

"இந்த அனைத்­து­லக தொடர்­புச் சேவையை ஏற்­ப­டுத்­தித் தந்து, இதற்­காக அணுக்­க­மாக பணி­யாற்­றிய அனைத்து அரசு அமைப்­பு­க­ளுக்­கும் நாங்­கள் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்," என்று டெசாரு டிவெ­லப்­மண்ட் ஹோல்­டிங்ஸ் நிர்­வாக இயக்­கு­ந­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான திரு­வாட்டி ரோஸ்­லினா அர்­பாக் கூறி­னார்.

இது­பற்­றிக் கூறிய டெசாரு ஈஸ்ட்­ஃப­ரிஸ் செர்­வி­சஸ் சேவையை இயக்­கும் பாத்­தாம் ஈஸ்ட் நிறு­

வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி ­பால் கானாவே, "இன்­னும் இரு வாரங்­களில் டெசா­ரு­வுக்­கான பட­குச் சேவையை தொடங்க முடி­வதை எண்­ணும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. டெசாரு கடற்­கரை, ஜோகூ­ரின் தென்­கி­ழக்­குப் பகுதி ஆகி­யவை பிரசித்தி பெற்­றவை.

"இந்நிலை­யில், விடுமு­றையைக் கழிக்க எண்­ணு­வோ­ருக்கு இந்த அனைத்­து­லகப் பயணச் சேவை பெரும் பயன்­த­ரும் அனு­ப­வ­மாக இருக்­கும்," என்று தெரி­வித்­தார்.