மாற்றம் குறித்து நிறைய பேருக்குத் தெரியவில்லை

மாற்றம் குறித்து நிறைய பேருக்குத் தெரியவில்லை

2 mins read
c15fc90b-3b22-4e0f-a2fc-8bd8f502d371
புதிய நடைமுறை வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க உதவும் என்று மனிதவள அமைச்சு கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் 2020ஆம் ஆண்டு தங்­கும் விடு­தி­களில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விடு­தியை விட்டு வெளியே செல்­லத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

வேலை­யி­டங்­க­ளுக்கு முத­லா­ளி­களே ஏற்­பாடு செய்­யும் போக்கு­வரத்­தில் மட்­டுமே இவர்­கள் சென்­ற­னர். விடு­முறை அல்­லது ஓய்வு நாள்­க­ளில்­கூட அவர்­கள் விடு­திக்கு வெளியே செல்ல அனு­மதி­இல்லை.

ஏறக்­கு­றைய 17 மாதங்­க­ளுக்­குப் பிறகு சென்ற ஆண்டு செப்­டம்­பரில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன. முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் ஒரு வாரத்­தில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட 500 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மட்­டும் வெளியே செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதற்­கான 'எக்­ஸிட் பாஸ்' எனும் அனு­ம­திக்கு இவர்­கள் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இதை­ய­டுத்து கடந்த ஏப்­ரல் மாதம் வார நாள்­களில் 25,000 பேரும், வார­யி­றுதி நாள்­க­ளி­லும் பொது­வி­டு­முறை நாள்­க­ளி­லும் 50,000 பேரும் வெளி­யி­டங்­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்று மனி­த­வள அமைச்சு அறி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கும் விடு­தி­களில் இருந்து வெளியே செல்ல நாளை முதல் 'எக்­ஸிட் பாஸ்' அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­குப் பதில் லிட்­டில் இந்­தியா, சைனா டவுன், கேலாங் செராய், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்­க­ளுக்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களிலோ பொது விடு­முறை நாள்­களிலோ செல்ல விரும்­பும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் 'பாப்­பு­லர் பிளேஸ் பாஸ்' எனும் அனு­ம­திச் சீட்­டுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

ஒரு நாளில் மொத்­தம் 80,000 பேருக்கு இத்­த­கைய அனு­ம­திச் சீட்டு வழங்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யது.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பல­ரும் 'எக்­ஸிட் பாஸ்' இல்­லா­மலே தாங்­கள் வெளி­யில் வந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னர். 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு நாளை நடப்­புக்கு வரும் புதிய நடை­முறை குறித்­தும் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

சிலர் 'எக்­ஸிட் பாஸ்' விண்­ணப்ப முறை குழப்­பம் அளிப்­ப­தா­கக் கூறி­னர்.

சிங்­கப்­பூர் சமூ­கத்­தின் இதர தரப்­பி­ன­ரைப் போன்றே வெளி­நாட்டு ஊழி­யர்­களும் புகழ்­பெற்ற இடங்­களுக்­குச் செல்­ல­வும் வழக்­க­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்­டும் என்று வெளி­நாட்டு ஊழி­யர் நல அமைப்­பு­கள் கோரு­கின்­றன.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒன்­று­கூ­டிய இடங்­களில் நாளை நடப்­புக்கு வரும் மாற்­றம் குறித்து மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் எடுத்­துக்­கூ­று­வ­தைக் காண முடிந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. தங்­கும் விடு­தி­க­ளுக்கு இது­குறித்த துண்­டுப் பிர­சு­ரங்­கள் அனுப்பப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கடந்த ஈராண்­டு­க­ளாக அர­சாங்­கத்­தின் விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­வ­தால் கிரு­மிப்­ப­ர­வ­லில் இருந்து தங்­க­ளைக் காத்­துக்­கொள்வது குறித்து நன்­றா­கவே அறிந்து­வைத்­தி­ருப்­ப­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கூறு­கின்­ற­னர்.

வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிக்கு வெளியே செல்ல நாளை முதல் புதிய நடைமுறை