ஊழியர் நல மேம்பாட்டுக்கான புதிய கூட்டு முயற்சி

ஊழியர் நல மேம்பாட்டுக்கான புதிய கூட்டு முயற்சி

1 mins read
7c8ee681-4bf0-4522-9d0b-4470e56acf30
-

நிறு­வ­னங்­கள் அவற்­றின் ஊழி­யர்­களின் உடல்­ந­லத்­தை­யும் மன­ந­லத்­தை­யும் மேம்­ப­டுத்த உத­வும் புதிய கூட்டு முயற்சி குறித்து அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'லுதெ­ரன் கம்­யூ­னிட்டி கேர் சர்­வி­சஸ்' (எல்­சி­சி­எஸ்) அமைப்­பும் உள்­ளூர் மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'ஐசி­எம் ஃபார்மா'வும் இணைந்து வேலை­யி­டங்­களில் கலந்­து­ரை­யா­டல்­கள், குறைந்த விலை­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பொருள்­க­ளின் விற்­பனை ஆகிய முயற்­சி­களை மேற்­கொள்­ள­வி­ருக்­கின்­றன.

ஊழி­யர்­க­ளி­டையே பிரச்­சி­னை­களைக் கையா­ளு­தல், உற­வு­களை வளர்த்­துக்­கொள்­ளு­தல் ஆகி­யவை தொடர்­பில் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும். 'ஐசி­எம் ஃபார்மா' நிறு­வ­னம், கைக­ளைச் சுத்­தம் செய்­யும் கிருமி நாசி­னித் திர­வத்­தை­யும் வாய் கொப்­ப­ளிக்­கும் திர­வத்­தை­யும் குறைந்த விலை­யில் வழங்க முன்­வந்­துள்­ளது.

புதிய திட்­டம் குறித்து சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று அறி­வித்­தார். 'எல்­சி­சி­எஸ்' அமைப்­பின் ஐந்­தா­வது மறு­சீ­ர­மைப்­புக் கருத்­த­ரங்­கில் அவர் உரை­யாற்­றி­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் உச்­சத்­தில் இருந்­த­போது குடும்ப வன்­முறை, மன­ந­லம் போன்ற விவ­காரங்கள் முக்­கி­யத்­து­வம் பெற்­ற­தா­கத் திரு மச­கோஸ் கூறி­னார்.

இவற்­றுக்­குத் தனி­யொரு நிறு­வ­னமோ ஒரு துறை மட்­டுமோ தீர்வு­காண இய­லாது. மக்­கள், தனி­யார்­துறை, அர­சாங்­கப் பிரி­வு­கள் என அனைவரும் இவற்­றுக்­குத் தீர்­வு­காண முன்­வர வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார். இணை­யத்­தில் நடை­பெற்ற இந்­தக் கருத்­த­ரங்­கின் முதல் நாளில் 150க்கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்­ட­னர்.