சமூக ஆர்வலரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து அமைச்சு விளக்கம்

சமூக ஆர்வலரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து அமைச்சு விளக்கம்

2 mins read
ccc03a04-6bb9-46d5-87bc-da1f1ccf1bd7
-

சிங்­கப்­பூ­ரில் இலக்­கிய, சமூக நிகழ்­வு­களில் பங்­க­ளித்­து­வந்த பங்ளா­தேஷ் ஊழி­ய­ரின் வேலை அனு­ம­திச் சீட்டு புதுப்­பிக்­கப்­ப­டா­தது குறித்து மனி­த­வள அமைச்சு விளக்­கம் அளித்­துள்­ளது.

கட்­டு­மா­னத் துறை ஊழி­ய­ரான ஸாகிர் ஹுசைன் கோகன், தான் 19 ஆண்­டு­கள் சிங்­கப்­பூ­ரில் வேலை­செய்­த­தா­கக் கூறி­யதை அமைச்சு சுட்­டி­யது. அவர் பல­முறை இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் குறித்து எழு­தி­ய­தா­க­வும் இருந்­த­போ­தும் அவ­ரது வேலை அனு­ம­திச் சீட்டு புதுப்­பிக்கப்­பட்­ட­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

ஆனால் ஒரு­வர் வெளி­யி­டும் பதி­வு­கள் தவ­றான புரி­தலை ஏற்­படுத்­தும்­போதோ சினத்­தைத் தூண்­டு­வ­தா­கவோ தவ­றா­ன­தா­கவோ இருக்­கும்­பட்­சத்­தில் அதற்கு முற்­றுப்­புள்ளி இட நேரி­டும் என்று அமைச்சு கூறி­யது.

சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் ஸாகிர் 'வெஸ்ட்­லைட் ஜாலன் துகாங்' தங்­கும் விடு­தி­யில் ஏற்­பட்ட கல­வ­ரம் குறித்­துப் பதி­விட்­டி­ருந்­தார்.

உண­வுத்­த­ரம், கொவிட்-19 நோயா­ளி­களை பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்­குக் கொண்­டு­செல்­வ­தில் ஏற்­பட்ட தாம­தம் ஆகி­யவை தொடர்­பில் ஊழி­யர்­க­ளுக்­கும் விடுதி நிர்­வா­கத்­திற்­கும் இடையே சச்­ச­ரவு ஏற்­பட்­டது.

அதன் தொடர்­பில் உதவி கேட்டு அழைப்பு வந்­த­தால் காவல்­துறை அங்கு செல்ல நேரிட்­டது.

சம்­ப­வத்­தில் கூடு­தல் காவல்­படைப் பிரி­வி­னர் பணி­யில் ஈடு­படுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் அப்­போது உள்­துறை அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால் ஸாகிர் சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அடி­மை­களைப் போல் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் ராணு­வத்­தி­ன­ரும் ஆயு­தப்­படை வாக­னங்­களும் 'வெஸ்ட்­லைட்' தங்­கும்­வி­டு­தி­யைச் சுற்றி வளைத்­தி­ருப்­ப­தா­க­வும் எழு­தி­யி­ருந்­தார்.

அது தவ­றான சித்­தி­ரிப்பு என்று கூறிய மனி­த­வள அமைச்சு, ஸாகி­ரின் தவ­றான பதி­வால் அந்­தத் தங்­கு விடு­தி­யிலோ வேறு விடு­தி­க­ளிலோ இருந்த ஊழி­யர்­கள் தவ­றா­கத் தூண்­டப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தை­யும் அவர்­க­ளின் உணர்­வுக் கொந்­த­ளிப்­பால் பொது ஒழுங்கு சீர்­கு­லைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தை­யும் அது சுட்­டி­யது.

"ஸாகிர் வெகு­கா­ல­மாக சமூக ஆர்­வ­ல­ரா­கச் செயல்­பட்­ட­போ­தும் அவ­ரது வேலை அனு­ம­திச் சீட்டு முன்­னர் புதுப்­பிக்­கப்­பட்டு வந்­தது.

"தற்­போது அவ­ரது அனு­மதி காலா­வ­தி­யா­கி­விட்ட நிலை­யில் வேலை ஏது­மின்றி அவ­ரால் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்க இய­லாது," என்று அமைச்சு தெரி­வித்­தது.

புதுப்­பிப்பு விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது குறித்து ஸாகிர் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தார்; ஆனால் அவ­ரது நிறு­வ­னம் மேல்­மு­றை­யீடு செய்­ய­வில்லை.

இம்­மா­தம் 15ஆம் தேதி அவர் தாய­கம் திரும்­பி­னார். இங்­கி­ருந்த கால­கட்­டத்­தில் பங்­ளா­தேஷ் சமூ­கத்­தி­ன­ருக்­கான கவி­தைப் போட்­டி­களில் பரி­சு­பெற்­ற­து­டன் இலக்­கி­யக் குழு ஒன்­றை­யும் தொடங்கி நடத்­தி­வந்­தார்.