பொறுப்பற்ற செயலால் ஆபத்தை ஏற்படுத்திய ஆடவர்

பொறுப்பற்ற செயலால் ஆபத்தை ஏற்படுத்திய ஆடவர்

1 mins read
efad559d-525b-4ec6-93e3-dbc0d2496687
-

ஓங் லாம் வா எனும் 54 வயது ஆட­வர் தனது பொறுப்­பற்ற செய­லால் பிற­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் செய­லில் ஈடு­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

செங்­காங் வட்­டா­ரக் குடி­யி­ருப்­பின் 16ஆவது மாடி வீட்­டில் வசிக்­கும் ஓங், சென்ற ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி, தீக்­குச்­சி­க­ளைக் கொண்டு தானே தயா­ரித்த வெடி­பொ­ருளை சன்­னல் வழியே கீழே வீசி­னார். அதே குடி­யி­ருப்­பின் 6ஆவது மாடி வீட்­டில் அது வெடித்­தது. இத­னால் திடுக்­குற்ற முக­மது யாசின் ஹாடி அப்­போது வழி­பாட்­டில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

காவல்­து­றை­யி­டம் அவர் புகார் அளித்­த­தை­ய­டுத்து அதி­கா­ரி­கள் ஓங்கை அடை­யா­ளம் கண்­ட­னர்.

விசா­ர­ணை­யில் இதற்கு முன்­ன­ரும் இரண்டு முறை வெடி­பொ­ருளை வெடிக்­கச் செய்ய முயன்­ற­தாக அவர் தெரி­வித்­தார்.

ஓங்­கிற்கு, மறு­வாழ்­வுப் பயிற்சி, வழக்­க­மான இடை­வெ­ளி­யில் காவல்­துறை அதி­கா­ரியை நேரில் சென்று காணு­தல், கட்­டாய சமூக சேவை ஆகி­ய­வற்­றுக்கு நீதி­பதி நேற்று உத்­த­ர­விட்­டார்.

செங்­காங் மருத்­து­வ­ம­னையை வெடி­குண்டு மூலம் தகர்க்­கப் போவ­தாக மிரட்­டல் விடுத்த குற்­றச்­சாட்­டை­யும் ஓங் எதிர்­நோக்­கு­கி­றார்.

இந்த வழக்­கின் விசா­ர­ணைக்­குப் பிறகு, அடுத்த மாதம் 21ஆம் தேதி அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­படும்.