பாரந்தூக்கி அடியில் சிக்கி இந்திய ஊழியர் மரணம்

பாரந்தூக்கி அடியில் சிக்கி இந்திய ஊழியர் மரணம்

1 mins read
2ceb5f70-5637-459a-abf4-69e77a984524
படம்: கூகிள் வரைப்படம் -

பாரந்தூக்கி அடியில் சிக்கிக்கொண்ட ஒரு 32 வயது இந்திய வெளிநாட்டு ஊழியர் மாண்டார்.

மண்டாய் குவாரியில் உள்ள ஒரு பணியிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று காலை நடந்தது. பாரந்தூக்கிக்குக் கீழே இருந்து சில கருவிகளை ஊழியர் எடுக்க முயன்றபோது, பாரந்தூக்கி திடீரென திரும்பியது. இதனால் ஆடவர் பாரந்தூக்கி அடியில் சிக்கிக்கொண்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணியிடத்தில் அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தையும் சேர்த்து இவ்வாண்டு 27 வேலையிட மரணங்கள் நடந்துள்ளன.