புக்கிட் தீமா வட்டாரத்தில் ஒரு பங்களா வீடு மாதம் $200,000 வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆண்டுக்கு $2.4 மில்லியன் வாடகை கட்டவேண்டும். 25,439 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தவர் ஒரு சீன நாட்டினர்.
கோல்டு கிளாஸ் பங்களா எனப்படும் இத்தகைய வீடுகளின் பரப்பளவு அதிகம். இதோடு பல நவீன வசதிகள் இத்தகைய வீடுகளில் உண்டு. சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற வீடுகளைக் காட்டிலும் இந்தக் குறிப்பிட்ட வீடு சற்று உயர்மட்டத்தில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களுடைய பார்வை வீட்டின் மேல் படாது எனக் கூறப்பட்டது. அண்மையில்தான் இந்த வீடு கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
சீன நாட்டைச் சேர்ந்த மற்றொருவர் வேறொரு கோல்டு கிளாஸ் பங்களாவை மாதம் $380,000 வாடகைக்கு எடுக்க முன்வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வீட்டின் உரிமையாளர் அதை நிராகரித்துள்ளார்.
பெரும்பாலும் சீன நாட்டினரே கோல்டு கிளாஸ் பங்களாக்களை வாடகைக்கு எடுப்பதாக சொத்து நிறுவனங்கள் தெரிவித்தன.
நிரந்தரவாசத் தகுதி அல்லது சிங்கப்பூர்க் குடியுரிமை பெறும்வரை அவர்கள் இத்தகைய வீடுகளில் வசிக்க விரும்புவதாகத் தெரிகிறது.

