பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசு தீவிரம்

பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசு தீவிரம்

2 mins read
e9889432-42c0-44bd-b7f0-bcc7e33933f3
-

அண்­மை­யில் வேலை­யி­டங்­களில் விபத்­து­களும் மர­ணங்­களும் நிகழ்ந்­தி­ருப்­பதை அடுத்து வேலை­யி­டப் பாது­காப்பை வலுப்­ப­டுத்த மனி­த­வள அமைச்சு கூடு­தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறது.

அதன்­படி கூடு­தல் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று அறி­வித்­தார்.

அதே நேரம், தர­மற்ற வேலை அணு­கு­மு­றை­களை நடை­மு­றைப்­

ப­டுத்­தும் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்­கான தண்­ட­னை­யைக் கடு­மை­யாக்­கு­வது குறித்­தும் வேலை­யி­டப் பாது­காப்­பில் சிறப்­பா­கச் செயல்­படும் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்­குக் கூடு­தல் வர்த்­தக வாய்ப்­பு­கள் வழங்­கு­வது குறித்­தும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

சட்­டப்­படி தேவை­யான வேலை­யி­டப் பாது­காப்பு சுகா­தார அதி

காரி­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட பல நிறு­வ­னங்­கள் கூடு­தல் அதி­கா­ரி­களை வேலையில் அமர்த்­தி­யி­ருப்­பதை டாக்­டர் டான் சுட்­டி­னார்.

பயிற்சி பெற்ற, ஆற்­றல்­மிக்க வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அதி­கா­ரி­க­ளால் ஒப்­பந்­த­தா­ரர்­களும் பல­ன­டை­வர் எனத் தாம் நம்­பு­

வ­தாக அவர் கூறி­னார்.

இந்­தத் தக­வல்­களை அவர் தேவன் நாயர் வேலை நிய­மன, வேலை வாய்ப்பு பயிற்­சிக் கழ­கத்­தில் கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள், பாது­காப்பு

அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரு­டன் நேற்று பகிர்ந்­து­கொண்­டார்.

அந்த நிகழ்­வில் சிங்­கப்­பூர் ஒப்­பந்­த­தா­ரர்­கள் சங்­கத்­தின் வரு­டாந்­திர பாது­காப்பு, சுகா­தார இயக்­கம் தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. வேலை­யி­டப் பாது­காப்­பின் தரத்தை உயர்த்­து­வ­தில் சங்­கத்­தில் உறுப்­பி­னர்­

க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­

ப­டுத்த இந்த இயக்­கம் நடத்­தப்­ப­டு­கிறது.

வேலை­யிட மர­ணங்­க­ளைத்

தவிர்க்க கட்­டு­மா­னத் துறை தன்­னால் முடிந்த அனைத்­தை­யும் செய்ய வேண்­டும் என்று அமைச்­சர் டான் அழைப்பு விடுத்­தார்.

ஊழி­யர்­கள் வேலை முடிந்­த­தும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­டம் திரும்­பு­வதை உறுதிசெய்ய வேண்­டும் என்­றார் அவர்.

இவ்­வாண்­டில் மட்­டும் 27 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வாகி இருப்­ப­தா­க­வும் அவற்­றில் 10 கட்டு­ மா­னத் துறை­யு­டன் தொடர்­பு­டை­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இந்த நிலை கவலை அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

வேலை­யி­டத்­தில் பாது­காப்பு, சுகா­தா­ரக் குறை­பாடு உள்ள நிறு­

வ­னங்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்­ட­னையை மனி­த­வள அமைச்சு கடந்த வாரம் மேலும் கடு­மை­யாக்­கி­யது. பாது­காப்­புச் சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது குறை­பாடு இருப்­பது தெரி­ய­வந்­தால் அதி­க­பட்­சம் $5,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

பாரந்­தூக்கி அடி­யில் சிக்கி

இந்­திய நாட்­ட­வர் மர­ணம்

இதற்­கி­டையே, நேற்று முன்­

தி­னம் காலை 10.15 மணி அள­வில் மண்­டாய் குவாரி சாலை­யில் உள்ள கட்­டு­மா­னத் தளத்­தில் இந்­தி­யா­வைச் சேர்ந்த 32 வயது ஊழி­யர் பாரந்­தூக்­கி­யின் அடி­யில் சிக்கி மாண்­டார். ஹுவா யாங் இஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் ஊழி­ய­ரான அந்த ஊழி­யரை கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­போது அவர் சுய­நி­னை­வின்றி இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. விபத்து நிகழ்ந்­த­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை நடைபெறுகிறது. விபத்து நிகழ்ந்த கட்­டு­மா­னத் தளத்­தில் பாரந்­தூக்­கி­யைப் பயன்­ப­டுத்­தும் பணி­களை நிறுத்­து­மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.