மார்சிலிங் தீச்சம்பவம்: வீட்டில் தனியாக இருந்த இரு சிறுவர்கள் மீட்பு

மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீடு நேற்று முன்­தி­னம் இரவு தீப்­பி­டித்து எரிந்­தது. அப்­போது அந்த வீட்­டில் இரு சிறு­வர்­கள் தனி­யாக இருந்­த­னர்.

இரவு 10.40 மணி அள­வில் புளோக் 218 மார்­சி­லிங் கிர­செண்ட்­டில் தீ மூண்­டது குறித்து தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது.

சம்­பவ இடத்தைத் தீய­ணைப்­புப் படை­யி­னர் சென்­ற­டை­வ­தற்­குள் வீட்­டிற்­குள் புகுந்த இரண்டு காவல்­துறை அதி­கா­ரி­கள் அச்­சி­று­வர்­

க­ளைக் காப்­பாற்­றி­னர்.

அந்த இரண்­டா­வது மாடி வீட்­டின் வர­வேற்பு அறை­யில் அச்­

சி­று­வர்­கள் சுய­நி­னை­வுடன் இருந்ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதற்கு முன்பு சிறு­வர்­க­ளைக் காப்­பாற்ற பொது­மக்­களில் ஒரு­வர் தீப்­பி­டித்து எரிந்­து­கொண்­டி­ருந்த வீட்­டின் கதவை உடைத்து உள்ளே விரைய முயன்­ற­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

சிறு­வர்­க­ளைக் காப்­பாற்ற உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொண்ட அந்த ஆட­வ­ரு­டன் தொடர்பு கொண்டு பாராட்டு தெரி­விக்­கப்­படும் என்று அது தெரி­வித்­தது.

தீய­ணைப்­புப் படை சம்­பவ இடத்தைச் சென்­ற­டைந்­த­போது அவ்­வீட்­டில் தீ கொழுந்­து­விட்டு எரிந்­த­தா­க­வும் அதி­லி­ருந்து கரும்­புகை வெளி­யே­றி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உட்­லண்ட்ஸ் தீய­ணைப்பு நிலை­யத்­தைச் சேர்ந்த தீய­ணைப்­புப் படை­யி­னர் சுவா­சக் கரு­வி­களை அணிந்­து­கொண்டு போராடி தீயை அணைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

காப்­பாற்­றப்­பட்ட இரு சிறு­வர்­களும் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்கு அவசர மருத்துவ வண்டிகளில் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பாதிக்­கப்­பட்ட கட்­ட­டத்­தில் வசிக்­கும் ஏறத்­தாழ 60 குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

தீ மூண்­ட­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை நடைபெறுகிறது.

தீயி­னால் ஏற்­பட்ட புகையை அந்த இரண்டு சிறு­வர்­களும் சுவா­சித்­த­தால் அவர்­க­ளுக்கு மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­ட­தா­க­வும் தற்­போது இரு­வ­ரின் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் மார்­சி­லிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

தீச்­சம்­ப­வத்­தால் பாதிக்­கப்­பட்­டது ஒரு வாடகை வீடு என்­றும் அவர் கூறி­னார்.

சிறு­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு அதே வட்­டா­ரத்­தில் தற்­கா­லிக வசிப்­பி­டத்தை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் வழங்­கும் என்று திரு ஸாக்கி தெரி­வித்­தார்.

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டியை விரி­வுப­டுத்த மார்­சி­லிங் கிர­செண்ட, மார்­சி­லிங் லேன் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள எட்டு குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் திரும்­பப்

பெற்­றுக்­கொள்­ளப் போவதாக அண்­மை­யில் செய்தி வெளி­யா­னது.

அவற்­றில் இந்த புளோக் 218 கட்­ட­ட­மும் அடங்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!