குளியலறையில் கண்ணாடிக் கதவு சிதறி பெண் காயம்

குளியலறையில் கண்ணாடிக் கதவு சிதறி பெண் காயம்

1 mins read
314f4776-e3e7-4f7a-b72e-f1b7c0715834
-

தம் மக­ளின் பிறந்­த­நாள் விழா­வைக் கொண்­டாட செந்­தோசா தீவில் உள்ள சிலோசோ பீச் ரிசோர்ட்­டில் தங்­கிய பெண்­ணுக்குக் காயம் ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் நிலை ஏற்­பட்­டது.

இம்­மா­தம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அதி­காலை 4.30 மணி அள­வில் குளி­ய­ல­றை­யின் கண்­ணா­டிக் கதவு சிதறி விழுந்­த­தில்

41 வயது திரு­வாட்டி சுசி­யானா ஹமீது காய­முற்­றார்.

அவ­ரது கரங்­கள், நெஞ்­சுப் பகுதி, தலை ஆகி­ய­வற்­றில்

வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டன.

தமக்­குக் காயம் ஏற்­பட்­ட­தைப் பார்த்த தமது 12 வயது மகள் அதிர்ச்சி அடைந்­த­தாக திரு­வாட்டி சுசி­யானா கூறி­னார்.

திரு சுசி­யானா மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு அவ­ரது உட­லி­லி­ருந்து கண்­ணா­டித் துண்டு­கள் அகற்­றப்­பட்­டன.

அவ­ருக்கு இரண்டு நாள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­

பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­படும் என்று செந்­தோசா மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஹோட்டல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.