இஸ்லாத்துக்கு எதிராக கருத்து; 18 மாதக் கண்காணிப்பில் இளையர்

இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் இஸ்­லாத் துக்கு­ எதி­ராக கருத்­து­களை வெளி­யிட்ட இளை­யர் ஒரு­வ­ருக்கு 18 மாதம் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி சீன நாட்­டைச் சேர்ந்த சன் சிகோங், 21, ஒவ்­வொரு நாளும் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வெளியே செல்லக் கூடாது. அது மட்­டு­மல்­லா­மல் அறு­பது மணி நேரம் இவர் சமூ­கப் பணி­யாற்ற வேண்­டும்.

இவ­ரது நன்­ன­டத்­தையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பெற்­றோர் 5,000 வெள்ளி பிணைப் பத்திரம் அளித்­துள்­ள­னர்.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வ­ரும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யு­மான இவர் மே மாதம் தன்மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு களை ஒப்­புக்­கொண்­டார். மற்­ற­வர் களின் சமய உணர்­வு­க­ளைப் புண் படுத்­தும் நோக்­கத்­தில் இவ­ரது பதிவு இருந்­தது.

இவ­ருக்குத் தண்­டனை விதிக்­கும்­போது தொந்­த­ரவு விளை­வித்­தது உள்­ளிட்ட இதர இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் நீதி­பதி கவ­னத்­தில் எடுத்­துக்கொண்­டார்.

நீதி­மன்­றத்­தில் பேசிய அர­சுத் தரப்பு துணை வழக்­க­றி­ஞர் செந்­தில்கும­ரன் சபா­பதி, “பாலி­யல் வன்முறையால் பாதிக்­கப்­பட்ட ஒரு பெண்­ணின் அவ­லக்­க­தையை ஆபா­சக் கருத்­து­க­ளு­டன் அவர் வெளி­யிட்­ட­தா­க­வும் அதன் பிறகு அவர் முன்பு பதி­விட்ட இஸ்­லா­த்துக்கு எதி­ரான பதிவு ஜூன் 7, 2020ல் மீண்­டும் பர­வி­ய­தா­க­வும் தெரி­வித்­தார்.

திரு சன்­னின் பாலி­யல் வன்­முறை தொடர்­பான பதி­வு­க­ளைக் கண்­ட­தும் ஆவே­ச­ம­டைந்த சிலர் அதற்­கு பதில் அளித்­தி­ருந்­த­னர். அப்­போது திரு சன் முன்பு பதி­விட்ட இஸ்­லாத்துக்கு எதி­ரான கருத்­து­க­ளை­யும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­த­னர். இத­னால் இஸ்­லா­த்துக்கு எதி­ரான அவ­ரது பதிவு மீண்­டும் இணை­யத்­தில் பர­வி­யது என்று வழக்­க­றி­ஞர் செந்­தில் குமரன் சபா­பதி விளக்­கி­னார்.

இதன் தொடர்­பில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து காவல்­து­றைக்கு 62 புகார்­கள் வந்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.

முன்­ன­தாக காவல்­து­றை­யி­னர் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். அதில் இன்ஸ்­ட­கி­ராம் பதி­வா­ளர் ஒரு­வர் வெளி­யிட்ட மற்­ற­வர்­க­ளைப் புண்­ப­டுத்­தக்கூடிய பதி­வால் இஸ்­லா­த்துக்கு எதி­ராக வன்­மு­றை­யைத் தூண்­டக்­கூ­டும் என்று பல புகார்­கள் வந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்­த­னர். வெறுப்­பூட்­டும் அந்­தப் பதிவு சமய உணர்­வு­களை புண்­ ப­டுத்­தக்­கூடிய பதிவு என்­றும் காவல்­து­றை­யி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

அதே அறிக்­கை­யில் சிங்­கப்­ பூரில் சமய நல்­லி­ணக்­கத்­தைப் பாதிக்­கும் வகை­யி­லான நட­வ­டிக்கை களுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று காவல்­து­றை­யி­னர் எச்­ச­ரித்­த­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!