புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இறக்குமதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இறக்குமதி

1 mins read
7850972c-fbbc-4f9c-a417-f2a8019b39a8
-

தாய்­லாந்து, மலே­சியா வழி­யாக லாவோ­ஸி­லி­ருந்து புதுப்பிக்கத் தக்க எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­வதை சிங்­கப்­பூர் தொடங்­கி­யுள்­ளது. புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை சிங்கப்பூர் இறக்­கு­மதி செய்­வது இதுவே முதன்முறை.

நூறு மெகா­வாட்ஸ் வரை­யி­லான நீர் மின்­சா­ரம் சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­படும். லாவோஸ், தாய்­லாந்து, மலே­சியா, சிங்­கப்­பூர் ஆகிய நான்கு ஆசி­யான் நாடு­களை இணைக்­கும் தற்­போ­துள்ள ஒருங்­கி­ணைப்­புத் திட்­டத்­தின் வழி­யாக புதுப்பிக்கத் தக்க எரி­சக்தி இறக்­கு­மதி செய்­யப்­படவிருக்கிறது. எல்­லை­க­ளுக்கு இடையே எரி­சக்தி வர்த்­த­கத்­தின் சாத்­தி­யம் பற்றி ஆராய்­வ­தற்­காக நான்கு நாடுகளுக்கு இடையே 2014ல் இந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

நூறு மெகா­வாட்ஸ் மின்­சா­ரம் என்­பது 2020ல் சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரத் தேவை­யில் 1.5 விழுக்­கா­டா­கும். இதன் மூலம் ஆண்டுக்கு 144,000 நான்கறை வீவக வீடு களுக்கு மின்சாரம் விநியோகிக்க முடியும்.

கடந்த செப்டம்பரில் சிங்கப் பூரின் கெப்பல் எலக்ட்ரிக், லாவோ ஸின் அரசாங்க மின்சார விநி யோக நிறுவனமான 'எலக்ட்ரிசைட் டு லாவோஸ்' ஆகியவற்றுக்கு இடையே எல்லைகளுக்கு இடை யிலான இந்த எரிசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இரண்டு ஆண்டு எரிசக்தியை வாங்கும் ஒப்பந்தத் திலும் கையெத்திட்டுள்ளன.

சிங்கப்பூரில் எரிசக்தி இறக்கு மதி செய்வதற்கான தொழில் நுட்பங்களைச் சோதிக்கவும் ஒழுங்குமுறையை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 அக்டோபரில் கரிமக் குறைவான வளங்களிலிந்து 30 விழுக்காடு மின்சாரத்தை இறக்குமதி செய்யப்போவதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.