சுவரோவியமாக தோ பாயோ வரலாறு

சுவரோவியமாக தோ பாயோ வரலாறு

1 mins read
3a9e68b0-d69a-4890-815c-d43ea72dc9e3
-

தோ பாயோ குடியிருப்பு வட்டாரத்தின் தொடக் கத்தையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் சுவரோவியம் தோ பாயோ எம்ஆர்டிக்குச் செல்லும் வழியில் வைக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று அந்த சுவரோவியங்களைத் திறந்து வைத்தார். பாரம்பரியத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நகைச்சுவை பாணியில் சுவரோவியங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

எஸ்எம்ஆர்டியின் 35வது ஆண்டைக் குறிக்கும் வகையில் 35 எம்ஆர்டி நிலையங்களில் உள்ளூர்க் கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப் பட்ட சுவரோவியங்கள் வைக்கப்பட்டு உள்ளன.