மார்பகப் புற்றுநோய்க்கு பலன்தரும் சிகிச்சை: ஆய்வு

மார்­ப­கத்­தில் இருந்து உட­லின் மற்ற பகு­தி­க­ளுக்­குப் புற்று அணுக்­கள் பர­வி­விட்ட நிலை­யில் இருப்­போர், புற்­று­நோ­யைக் கட்டுப்­ப­டுத்த இரு­வகை மருந்­து­களைச் சேர்த்து உட்­கொள்­வது உத­வ­லாம் என ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

அந்த ஆய்­வா­ளர்­கள், சிங்கப்பூர் தேசிய பல்­க­லைக்­கழக புற்­று­நோய்க் கழ­கம், தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள சிங்­கப்­பூர் புற்­று­நோய் அறி­வி­யல் கழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள்.

‘லெட்­ரோ­ஸோல்’ என்­பது சுரப்பு­நீர் எதிர்ப்பு மருந்து. தைராய்ட், கல்­லீ­ரல் புற்­று­நோய்­களைக் குணப்­ப­டுத்த அமெ­ரிக்க உணவு, மருந்து நிர்­வாக அமைப்­பி­டம் இருந்து ‘லென்­வ­டி­னிப்’ எனும் மருந்து ஏற்­கெ­னவே ஒப்­பு­தல் பெற்­றுள்­ளது.

நான்­காம் கட்ட மார்­ப­கப் புற்று­நோய் உடைய 43 பேரி­டம் ஆய்­வா­ளர்­கள் சோதனை மேற்­கொண்­ட­னர். ஆய்­வில் பங்­கெடுத்த அந்த நோயா­ளி­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட முந்­தைய சிகிச்சை முறை பலன் தர­வில்லை.

மேற்­கூ­றப்­பட்ட இரு­வகை மருந்­து­கள் இணைக்­கப்­பட்ட சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போது, ஆய்­வில் பங்­கேற்ற பாதிப் பேரிடம் புற்­றுநோய்க் கட்­டி­கள் சுருங்­கின அல்லது ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக புற்று­நோய் கட்­டுக்­குள் வந்­தது. அவர்­களில் பல­ர் தங்­கள் வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடிந்­தது.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்டும் 2,000க்கும் அதி­க­மான மாதர்­கள் மார்­ப­கப் புற்­று­நோ­யால் அவ­தி­யு­று­கின்­ற­னர்.

ஆண்­டு­தோறும் 400க்கும் மேற்­பட்­டோர் இந்­நோ­யால் இறப்­ப­தாக சிங்­கப்பூர் புற்­று­நோய் பதி­வ­கத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!