பாதுகாப்புப் பணியாளர்கள் நலனுக்கான புதிய குழு

பாதுகாப்புப் பணியாளர்கள் நலனுக்கான புதிய குழு

2 mins read
d8f76e9a-39af-4106-9db6-8b7079f395a5
-

பாது­காப்­புப் பணி­யா­ளர்­க­ளின் நலம்­பே­ணும் புதிய குழு ஒன்று இந்த ஆண்டு இறு­திக்­குள் அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

'நைட் ஃபிரேங்க் சிங்­கப்­பூர்' நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூர் பாது­காப்­புப் பணி­யா­ளர்­கள் சங்­க­மும் இணைந்து நேற்று இதனை அறி­வித்­தன.

புதிய குழு பாது­காப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்கு கற்­றல், மேம்­பாட்­டுத் திட்­டங்­களை வழங்­கு­வ­து­டன் மன­நல ஆலோ­சனை, சமூக ஆத­ரவு ஆகி­ய­வற்­றுக்­கும் ஏற்­பாடு செய்­யும்.

ஊழி­யர்­க­ளை அதிகம் சார்ந்து இருப்­ப­தைக் குறைக்­கும் நோக்­கில் தானி­யக்க வேலை நடை­முறை­கள் குறித்­தும் இந்­தக் குழு ஆய்­வு­செய்­யும்.

புதிய குழு­வில் பாது­காப்பு அமைப்­பு­கள், சிங்­கப்­பூர் பாது­காப்­புப் பணி­யா­ளர்­கள் சங்­கம், சொத்து மேலாண்மை முக­வர்­கள் ஆகி­யோர் இடம்­பெற்­றி­ருப்­பர் என்று கூறப்பட்டது.

குழு­வின் இலக்­கு­கள் நிறை­வே­றப் பங்­க­ளிக்­கும்­படி பாது­காப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்­கான தொழிற்­சங்­கத்­துக்­கும் அழைப்­பு­ வி­டுக்கப்­படும்.

முன்­ன­தாக 'நைட் ஃபிரேங்க் சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் அதன் இரண்டு ஏலக்­குத்­த­கை­களில் புதி­தாக வேலைக்­குச் சேர்த்­துக்­கொள்­ளப்­படும் பாது­காப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்­கான வயது வரம்பு குறித்­துக் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இது தகுதி அடிப்படையிலான ஆள்சேர்ப்பு நடைமுறைக்கு எதிரானது என்றும் இத­னால் ஊழி­யர்­கள் நியா­ய­மற்ற முறை­யில் பணி­யில் இருந்து நீக்­கப்­படும் சாத்­தி­யம் இருப்பதையும் சிங்கப்பூர் பாதுகாப்புப் பணியாளர்கள் சங்­கம் சுட்­டிக்­காட்­டி­யது.

அதன் பிறகு மன்­னிப்­புக் கோரிய 'நைட் ஃபிரேங்க் சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் ஏலக்­குத்­தகை தொடர்­பான ஆவ­ணங்­க­ளைத் திருத்தி மீண்­டும் வெளி­யிட்­டது.

நிறு­வ­னம் ஆள்­சேர்க்­கை­யில் நியா­மான நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தைச் சங்­கம் உறு­தி­செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அதி­க­ரிக்­கும் செல­வு­கள், ஊழி­யர் எண்­ணிக்­கை குறைவு ஆகிய பிரச்­சி­னை­கள் குறித்து இரு­த­ரப்­பும் ஒப்­புக்­கொண்­டன.

துறைசார்ந்த தரப்புகளின் ஒத்து­ழைப்பு, தொடர்ச்­சி­யான கலந்­து­ரை­யா­டல்­கள், ஆழ­மான புரி­தல் ஆகி­ய­வற்­றின் மூலமே இவற்றுக்குத் தீர்­வு­காண முடி­யும் என்று நேற்­றைய கூட்­ட­றிக்கை குறிப்­பிட்­டது.