பொருள், சேவை வரி ஏய்ப்புக்கு $4.42 மி. அபராதம், சிறை

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பொருள்­க­ளின் பொருள், சேவை வரியை ஏய்த்­த­து­டன் பொய்­யான ஆவ­ணங்­க­ளை­யும் சமர்ப்­பித்த சரக்கு நிர்­வாக நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ருக்கு கிட்­டத்­தட்ட 4.42 மில்­லி­யன் வெள்ளி அப­ரா­த­மும் எட்டு மாதச் சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான 44 வயது ஹோ ஷியன் டியன் ஏறத்­தாழ ஒன்­றே­கால் மில்­லி­யன் வெள்ளி பொருள், சேவை வரி­யைச் செலுத்­தா­மல் ஏய்த்­த­தாக சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை நேற்று தெரி­வித்­தது.

2015ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இவர் இவ்­வாறு ஏமாற்­றி­ய­தா­க­வும் இறக்­கு­ம­தி­யான பொருள்­க­ளின் மதிப்பு குறித்­துத் தவ­றான தக­வல்­க­ளைச் சமர்ப்­பித்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. 632 இறக்­கு­ம­தி­கள் தொடர்­பில் இவ்­வாறு தவ­றான தக­வல்­களை அவர் தந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹோ தன் மீது சுமத்­தப்­பட்ட ஆறு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஒப்­புக்­கொண்­டார்.

தண்­டனை விதிக்­கும் முன்­னர் இத்­த­கைய மேலும் ஆறு குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

2019ஆம் ஆண்டில், இறக்­கு­மதி நிறு­வ­னம் நடத்­தும் ஹோவின் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ரி­டம் சிங்­கப்­பூர் உள்நாட்டு வரு­வாய் ஆணை­யம் சோதனை நடத்­தி­யது.

சோத­னை­யின்­போது இறக்­கு­ம­தி­யான சரக்­கு­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அனு­மதி தொடர்­பில் சில குள­று­ப­டி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக சுங்­கத்­துறை கூறி­யது.

வாடிக்­கை­யா­ளர் செலுத்­திய பொருள், சேவை வரித் தொகை­யைப் பெற்­றுக்­கொண்ட ஹோ அத­னைத் திருத்தி தவ­றான தொகையை ஆணை­யத்­தி­டம் செலுத்­தி­னார். வாடிக்­கை­யா­ள­ருக்கு இந்த விவ­ரம் தெரி­யா­ம­லும் பார்த்­துக்­கொண்­டார்.

சுங்­கத்­து­றைக்கு அவர் தவ­றான தக­வல்­க­ளைச் சமர்ப்­பித்­த­தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!