‘டிபிஎஸ்’ மோசடி: எட்டு இளையர்கள்மீது குற்றச்சாட்டு

'டிபி­எஸ்' வங்கி மோச­டி­யில் 60க்கும் மேலா­னோர் 60,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை இழக்­கக் கார­ண­மாக இருந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் எட்­டுப் பேர்­மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. இவர்­கள் 16 வய­துக்­கும் 27 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

குற்­றம் சாட்­டப்­பட்­டோ­ரில் ஐவர் 1,500 வெள்ளி பணத்­துக்கு ஈடாக அறி­மு­க­மற்­றோ­ரி­டம் தங்­க­ளது 'சிங்­பாஸ்' கணக்கு விவ­ரங்­க­ளைத் தந்­த­தா­கக் கூறப்­பட்­டது. மோச­டிக்­கா­ரர்­கள் அந்த விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி புதி­தாக வங்­கிக் கணக்­கு­க­ளைத் தொடங்­கி­ய­து­டன் 'டிபி­எஸ்' வங்கி மோசடி மூலம் ஈட்­டிய பணத்தை நல்ல பண­மாக மாற்ற அந்த வங்­கிக் கணக்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

மோச­டிக்­கா­ரர்­கள் 'டிபி­எஸ்' வங்கி­யில் இருந்து அனுப்­பு­வ­து­போ­லக் குறுஞ்­செய்­தி­களை அனுப்­பு­வர். வங்­கிக் கணக்­கில் வழக்­கத்­துக்கு மாறான நட­வ­டிக்­கை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் சந்­தே­கத்­துக்­கு­ரிய இத்­த­கைய நட­வ­டிக்­கை­களால் வங்­கிக் கணக்கு முடக்­கப்­பட்­ட­தா­க­வும் அந்­தக் குறுஞ்­செய்தி சொல்­லும்.

இணைக்­கப்­பட்­டி­ருக்­கும் இணைய முக­வரி மூலம் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் அடை­யா­ளத்தை உறு­தி­செய்­யும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வர். அதன்­படி செய்­த­போது பாதிக்­கப்­பட்­டோ­ரின் வங்­கிக் கணக்­கில் இருந்த தொகையை ஏமாற்­றுக்­கா­ரர்­கள் தங்­கள் கணக்­குக்கு மாற்­றி­கொள்­வர்.

'சிங்­பாஸ்' விவ­ரங்­க­ளைத் தந்த ஐவ­ரில் சில­ருக்கு பேசி­ய­படி 1,500 வெள்ளி தொகை தரப்­ப­ட­வில்லை என்று காவல்­துறை கூறி­யது.

'சிங்­பாஸ்' கணக்கு, வங்­கிக் கணக்கு, கைத்­தொ­லை­பே­சித் தொடர்பு ஆகி­யவை தொடர்­பான விவ­ரங்­களை எளி­தில் பணம் சம்­பா­திக்க உத­வு­வ­தா­கக் கூறு­வோ­ரி­டம் வெளி­யிட வேண்­டாம் என்று பொது­மக்­க­ளுக்­குக் காவல்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. இத்­த­கை­யோர் குற்­றச்­செ­யல்­களில் தொடர்­பு­டை­ய­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் அதற்­குப் பொறுப்பு ஏற்­றுக்­கொள்ள நேரி­டும்.

'யூஓபி' வங்­கி­யில் தனது பெய­ரில் வங்­கிக் கணக்கு தொடங்­கிய 16 வயது இளம்­பெண் அதனை மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனு­ம­தித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தவ­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு 'சிங்­பாஸ்' விவ­ரங்­க­ளைப் பகிர்ந்து­கொண்­டது உறு­தி­செய்­யப்­பட்­டால் 10,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தத்­து­டன் மூன்று ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

தனது பெய­ரில் வங்­கிக் கணக்­கைத் தொடங்கி மற்­ற­வர்­கள் பயன்­ப­டுத்த அனு­ம­தித்­தது நிரூ­பிக்­கப்­பட்­டால் அதி­க­பட்­ச­மாக மூன்று ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!