தம்பதியரைக் கத்தியால் தாக்கியவர் மீது குற்றச்சாட்டு

தம்பதியரைக் கத்தியால் தாக்கியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
e3a63dd3-f3ea-4b00-b55a-fa46a231e7a6
படம்: @சிங்கப்பூர் இன்சிடன்ஸ், இன்ஸ்டாகிராம்/ஒஸ்மோண்ட் ச்சியா -

ஈசூன் வட்டாரத்தில் ஒரு தம்பதியரைக் கத்தியால் தாக்கியவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆயுதம் ஏந்தி காயம் ஏற்படுத்திய இரண்டு குற்றஞ்சாட்டுகள் அப்துல் கரீம் சிக்கான்தர், 58 மீது சுமத்தப்பட்டது.

ஈசூன் ஸ்டரீட் 51 புளோக் 510Aல் வியாழக்கிழமை மாலை நேரம் இருவரை கரீம் கத்தியால் தாக்கியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. தாக்கப்பட்ட ஆடவருக்கும் கரீம்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்தத் தம்பதியரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அந்த மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக அக்கம்பக்கத்தார் குறிப்பிட்டனர். தம்பதியைக் கத்தியால் தாக்கப்போவதாக கரீம் மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

தண்டனை குறைப்பு காலத்தின்போது மீண்டும் ஒரு குற்றத்தை புரிந்ததற்கு கரீம்க்கு கடுமையான தண்டனை அளிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

அயுதம் கொண்டு காயப்படுத்திய குற்றத்துக்கு அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படலாம்.