புக்கிட் மேராவில் உள்ள புளோக் ஒன்றின் குடியிருப்பாளர்களிடையே கிட்டத்தட்ட 170 பேருக்கு காசநோய் கண்டுபிடிக்கப் பட்டது. தாங்கள் கவலை அடைந்து இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எண் 2 ஜாலான் புக்கிட் மேரா முகவரியில் வசிக்கும் 574 குடியிருப்பாளர்கள் மற்றும் ஊழியர்களில் ஏறக்குறைய 30 விழுக் காட்டினருக்கு காசநோய் இருப்பதாகத் தெரியவந்தது.
அவர்கள் கடந்த மே மாதம் தாங்களாகவே பரிசோதனைக்குச் சென்றனர்.
எஞ்சிய 175 பேருக்கு கடந்த வெள்ளி, சனிக்கிழமை களில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டது.
சூழ்நிலை கவலை தருவதாக அவர்கள் கூறினர்.
முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தரைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தமாக அடிக்கடி துடைப்பது போன்ற கொவிட்-19 கால நடவடிக்கைகளை எடுப்பதும் பலன் தரும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

