போதைப்பொருள் ஒழிப்பு: ‘சானா’ முக்கிய பங்கு

போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் ஒழிப்புச் சங்­கம் (சானா) மிக முக்­கிய பங்­காற்றி இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று தெரி­வித்­தார்.

அந்­தத் தொண்­டூ­ழிய அமைப்­பின் 50வது ஆண்­டு­விழா நேற்று போன விஸ்­தா­வில் உள்ள நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக ஒன்-நார்த் வளா­கத்­தில் நடந்­தது. அதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­க அதி­பர் உரை­யாற்­றி­னார்.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்புப் பிரி­வுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் வகை­யில் சானா 1972ல் தோற்­று­விக்­கப்­பட்­ட­தை­யும் சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தில் வெற்­றி­க­ர­மான நாடாக இருந்து வந்­துள்­ளது என்­ப­தை­யும் அதி­பர் தனது உரை­யில் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதில் சானா அமைப்பு மிக முக்­கி­ய­மான பங்­காற்றி வந்திருக்­கிறது என்­ப­தில் ஐய­மில்லை.

போதைப் புழங்­கி­க­ளுக்கு மறு­வாழ்வு அளிப்­ப­தி­லும் அவர்­கள் வெற்­றி­க­ர­மான முறை­யில் மீண்­டும் சமூ­கத்­தில் ஒன்­றி­ணைய உத­வு­வதிலும் போதைப் புழங்­கி­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு ஆத­ரவு தரு­வ­தி­லும் சானா ஆற்றியுள்ள தொண்டை அதி­பர் அங்­கீ­கரித்­துப் பாராட்­டி­னார்.

கஞ்சா போன்­ற­வற்றை சட்­ட பூர்­வ­மாக்க அதிக நாடு­கள் இப்­போது முயன்று வரு­கின்­றன. இத்­தகைய ஒரு சூழ­லில் வெளி­நா­டு­களி­லும் சானா தன்­னு­டைய முயற்சி­களை முன்­னெ­டுத்து இருக்­கிறது என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

2018ல் ஐநா பொரு­ளி­யல் சமூக மன்­றத்­தின் ஓர் உறுப்­பி­னர் என்ற முறை­யில் சானா­வுக்குச் சிறப்பு ஆலோ­சனை அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. அது முதல் ஐநா போதைப்­பொ­ருள் ஆணை­யம் நடத்­தும் நிகழ்ச்­சி­க­ளின்­போது தீவிர செயல் அமைப்­பாக சானா இருந்து வந்­தி­ருக்­கிறது என்­பதை அதி­பர் ஹலிமா சுட்­டிக்­காட்­டி­னார்.

அனைத்­து­லக ஆலோ­ச­னைப் பணி­கள் மூலம் சானா சிங்­கப்­பூரின் போதைப்­பொ­ருள் ஒழிப்பு அணுகு­முறை­யின் முக்­கி­யத்­து­வத்தை விளக்­கிக் கூற முடிந்துள்ளது.

போதைப்­பொ­ருள் அற்ற சிங்­கப்­பூரே தனது விருப்­பம் என்­பதை அனைத்­து­லக அள­வில் சானா பகிர்ந்­து­கொண்டு இருக்­கிறது என்றும் அதி­பர் குறிப்­பிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!