தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பிடிஒ' வீடுகள்: அழைப்பு வரும் 40 விழுக்காட்டினர் பதிவுசெய்வதில்லை

1 mins read
bc89b63a-0e9e-4fad-9ffa-1a15d508fb3b
ஹெண்டர்சன் சாலையில் உள்ள வீவக வீடுகள். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'பிடிஒ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீட்டுக்குப் பதிவுசெய்யுமாறு அழைப்பு வருவோரில் 40 விழுக்காட்டினர் அவ்வாறு செய்வதில்லை.

அதனால் விண்ணப்பம் செய்தோரில் அவற்றை வாங்குவதில் உறுதியாக இருப்போருக்கு வீடு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈராண்டுகளாக வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து வீட்டைத் தேர்ந்தெடுக்குமாறு அழைப்பைப் பெறுவோர் அதை ஏற்றுக்கொள்ளுமாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டது.

வீட்டுக்குப் பதிவுசெய்ய விரும்பாதோர் மீண்டும் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகளுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் முந்தைய விண்ணப்பங்கள் கருத்தில்கொள்ளப்படமாட்டா.

'எஸ்பிஎஃப்' எனும் எஞ்சியிருக்கும் வீடுகளின் விற்பனைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்யும் அத்தகையோருக்கும் இது பொருந்தும்.