தீவு விரைவுச்சாலை விபத்து, ஒன்பது பேர் மருத்துவமனையில்

1 mins read
1ddca413-6bf7-4551-8d90-8ff9b9bb5a93
விபத்தில் சிக்கிய வாகனங்களில் ஒன்று. படம்: குவோட்டிகோ / ஃபேஸ்புக் -

ஞாயிற்றுக்கிழமையன்று (26 ஜூன்) தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஒரு டாக்சியும் மூன்று வாகனங்களும் விபத்தில் சிக்கின.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டோரில் 56 வயது பெண் டாக்சி ஓட்டுநரும் ஒருவர்.

காலை ஒன்பது முப்பது மணியளவில் தீவு விரைவுச்சாலையின் ஆடம் சாலைக்குப் பிரிந்து செல்லும் பாதையைத் தாண்டிய பகுதியில் விபத்து நேர்ந்ததாக தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.