குறைந்த விலையில் டுரியான் வாங்க நீண்ட வரிசையில் சிங்கப்பூரர்கள்

குறைந்த விலையில் டுரியான் வாங்க நீண்ட வரிசையில் சிங்கப்பூரர்கள்

1 mins read
374dfd78-2cce-4913-bbd4-27b0a79c0c45
-

சிங்­கப்­பூ­ரில் குறைந்த விலை­யில் டுரி­யான் பழங்களின் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது.

இந்­தப் பரு­வத்­தில் நல்ல விளைச்­சல் என்­ப­தால் ஜோகூர், பாகாங் ஆகி­ய­வற்­றில் இருந்து தரு­விக்­கப்­பட்ட டுரி­யான்­கள் கடை­களில் குவிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒன்­றரை முதல் இரண்டு கிலோ எடை­யுள்­ளவை முதல் தர­மான பழங்­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­படும்.

வழக்­க­மாக இவை ஒவ்­வொன்­றும் $20 முதல் $25 வரை விற்­ப­னை­யா­கும்; இப்­போது சிறிய அள­வி­லான டுரி­யான்­கள் பத்து வெள்­ளிக்கே கிடைக்­கின்­றன.

எப்­போ­தும் தர­மான டுரி­யான் பழங்­களே தங்­கள் தெரிவு என்று கூறும் வாடிக்­கை­யா­ளர்­கள் தற்­போது மலி­வா­கக் கிடைக்­கும் பழங்­களில் சுளை­கள் குறைவு என்­ப­தைச் சுட்­டி­னர். விற்பனை கிடுகிடுவென உயர்ந்ததில் கடைக்காரர்களுக்கு மகிழ்ச்சி.

நேற்று முன்­தி­னம் அங் மோ கியோ கடை ஒன்­றில் 2,000 கிலோ­கி­ரா­முக்­கும் அதி­க­மான டுரி­யான்­கள் விற்­ப­னை­யா­யின.