தீவு விரைவுச்சாலையில் விபத்து; ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை

தீவு விரைவுச்சாலையில் விபத்து; ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை

1 mins read
46c8eceb-ac87-4cb5-af1c-2a09de75dfce
படம்: கோட்டிகோ/ஃபேஸ்புக் -

துவாசை நோக்­கிச் செல்­லும் தீவு விரை­வுச்­சா­லை­யில் ஆடம் ரோட்­டிற்கு வெளி­யே­றும் வழி­ய­ருகே நேர்ந்த விபத்­தை­ய­டுத்து ஒன்­பது பேர் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

ஒரு டாக்­சி­யும் இரண்டு கார்­களும் மோதிக்­கொண்ட சம்­ப­வம் குறித்து நேற்­றுக் காலை ஒன்­ப­தரை மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் தெரி­வித்­தன.

சம்­ப­வத்­தில் டாக்சி ஓட்­டு­ந­ரான 56 வய­துப் பெண்­ணு­டன் அதில் பய­ணம் செய்த இரு பெண்­களும் காய­ம­டைந்­த­தா­கக் கூறப்­பட்­டது. இரு­வ­ரின் வயது முறையே 43 மற்­றும் 63. மேலும் கார் ஓட்­டு­ந­ரான 66 வயது ஆட­வ­ரும் அவ­ரு­டன் காரில் பய­ணம் செய்த ஐந்து பய­ணி­களும் காய­ம­டைந்­த­னர்.

அவர்­கள் 54 வய­துக்­கும் 67 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று காவல்­துறை தெரி­வித்­தது.

காய­ம­டைந்­தவர்களில் ஒரு­வர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­கும் மற்ற எட்டு பேரும் இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னைக்­கும் சுய­நி­னை­வு­டன் கொண்­டு­செல்­லப்­பட்­ட­தாக அதிகாரிகள் கூறினர்.

விபத்தையடுத்து ஸ்டீவன்ஸ் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்­துக் காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.