உணவு உற்பத்திச் செலவு 80% உயரக்கூடும்

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் உணவு விலை உயர்­வுக்கு மோச­மான வானி­லை­யும் ஒரு கார­ணம் என்­ப­தால் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­பது இதற்கு ஒரு தீர்­வாக முன்­வைக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் இதன்­மூ­லம் உணவு உற்­பத்­திச் செல­வு­கள் அதி­க­ரிக்­கும் என்று அண்மை ஆய்­வு ­முடி­வு­கள் காட்­டு­கின்­றன.

'ஆக்ஸ்­ஃபோர்ட் எக­னா­மிக்ஸ்' நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் 2050ஆம் ஆண்­டுக்­குள் இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­களில் உணவு உற்­பத்­திக்­கான செல­வு­ 80 விழுக்­கா­டு­வரை உயரக்கூடும் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

அர­சாங்­கங்­கள் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் அறவே இல்­லாத நிலையை எட்­டும் முயற்­சி­யில் விதிக்­கும் கட்­டுப்­பா­டு­கள் இதற்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது.

பரு­வ­நிலை மாற்­றம் உண­வுப் பொருள்­க­ளின் விலை­யில் ஏற்­படுத்­தும் தாக்­கம் குறித்த ஆய்­வின் முடி­வு­கள் சென்ற வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற காணொ­ளிக் கருத்­த­ரங்­கில் பகி­ரப்­பட்­டன.

தாய்­லாந்­தில் 2014ஆம் ஆண்டு டிசம்­ப­ரி­லும் வியட்­னா­மில் 2019 பிப்­ர­வ­ரி­யி­லும் ஏற்­பட்ட கடு­மை­யான வெப்ப அலை­க­ளால் அப்­போது உணவு விலை ஏறத்­தாழ ஆறு விழுக்­காடு உயர்ந்­ததை ஆய்வு சுட்­டி­யது. வரும் ஆண்டுகளில் இத்­த­கைய மோச­மான வானிலை அடிக்­கடி ஏற்­ப­டலாம் என அஞ்சப்படுகிறது.

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் அறவே இல்­லாத நிலை இதனை மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டும் என்­றா­லும் நீடித்த நிலைத்­தன்­மைக்­கான நட­வ­டிக்­கை­களால் வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­களைத் தவிர்க்க அர­சாங்­கங்­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

சூரி­ய­சக்­தித் தக­டு­க­ளைப் பயன்­ப­டுத்த ஊக்­கு­வித்­தல், வீணா­கும் உண­வில் இருந்து எரி­பொ­ருள் உற்­பத்தி செய்­தல் போன்­ற­வற்­றைப் பின்­பற்­று­வ­தோடு வேளாண் காப்­பீட்­டுத் திட்­டங்­கள் மூலம் இயற்­கைப் பேரி­டர்­க­ளுக்­குப் பிறகு விவ­சா­யி­கள் விரை­வில் மீண்­டு­வர உத­வு­தல் ஆகி­ய­வற்­றில் அர­சாங்­கங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும்; வரு­வா­யில் பெரும்­ப­கு­தியை உண­வுக்­குச் செல­வி­டும் ஏழ்­மை­யான குடும்­பங்­க­ளுக்கு இது உதவியாக இருக்கும் என்று கருத்­த­ரங்­கில் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!