உள்ளுணர்வே கலைஞர்களின் கலங்கரை விளக்கம்

கி. ஜனார்த்­த­னன்

பிரான்­சில் வளர்ந்து 'ஹிப் ஹாப்' நட­னக்­க­லை­யைக் கற்ற உஷா ஜெய், 25, தமி­ழர் மர­பு­டன் இணைய வேண்­டும் என விரும்பி ஐந்து ஆண்­டு­க­ளி­லேயே பரத

நாட்­டி­யத்­தைக் கற்­றுக்­கொண்­டார்.

இப்­போது இவர் தயா­ரித்து இவரே ஆடும் பர­த­நாட்­டி­யக் காணொ­ளி­கள் உல­கெங்­கும்

பல­ரால் ரசிக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கை­யின் யாழ்ப்­பா­ணத்­தைப் பூர்­வி­க­மா­கக் கொண்ட குமாரி உஷா, பிரான்­சி­லேயே வளர்ந்து தற்­போது முழு­நேர நட­னக் கலை­ஞ­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

"பர­த­நாட்­டி­யம் என்­னைத் தொடர்ந்து பர­வசம் அடை­யச் செய்­யும் ஒரு கலை," என்று அவர் கூறி­னார்.

கேனன் கெட்டோ-ஸ்டைல் என்­ப­வ­ரி­டம் 'ஹிப் ஹாப்'

நட­னத்தை 15 வயது முதல் கற்ற உஷா, 20 வய­தில் பர­த­நாட்­டி­யத்தை அந்­துஷா உத­யக்

குமா­ரி­டம் கற்­றார்.

இந்த இரண்டு பாணி­க­ளை­யும் நய­மா­கக் கலந்து ஆடும் உஷா­வின் காணொ­ளி­கள்,

தனித்­து­வம் வாய்ந்தவை.

அண்­மை­யில் தாம் வெளி­யிட்ட காணொ­ளி­க­ளைப் பார்த்த அமலா பால், மாத­வன், அக்‌ஷரா ஹாசன் உள்­ளிட்ட தமிழ்த் திரைப்­பி­ர­ப­லங்­கள் காணொ­ளிக­ளைப் பகிர்ந்­த­து­டன் பாராட்டி கருத்­து­க­ளை­யும் பதி­விட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளு­டன் உல­கெங்­கும் உள்ள கலை­ஞர்­களும் ரசி­கர்­களும் தம் படைப்­புகளை ரசிப்ப

தா­கக் கருத்­துப்­ப­திவு செய்­யும்­போது மனம் மிக­வும் நெகிழ்­வ­தா­க உஷா கூறி­னார்.

2013ஆம் ஆண்­டில் நடனக் காணொ­ளி­களை வெளி­யி­டத் தொடங்­கிய உஷா, தமது

உள்­ளு­ணர்­வு­படி செயல்­ப­டு­கி­றார்.

"பார்­வை­யா­ளர்­க­ளுக்­குப் படைப்­பு­களை உரு­வாக்­கும் முன்பு நம் சொந்த திருப்­திக்­காக அவற்றை உரு­வாக்­க­வேண்­டும். அப்­போ­து­தான் நம் படைப்­பு­களில் உண்மை இருக்­கும்" என்று அவர் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

பாடல்களுக்­குள் இரண்­ட­றக் கலந்தால்தான் தம் கற்­ப­னைச் சிறகுகள் ­ சிறகடித்துப் பறக்கும் என்று அவர் கூறி­னார்.

காணொளி தயா­ரிப்­ப­தற்கு எவ்­வ­ளவு நேரம் எடுத்­தா­லும் அத­னைப் பொறு­மை­யு­ட­னும் நிதா­னத்­து­ட­னும் செய்ய விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

அண்­மை­யில் வெளி­வந்த 'ஹைப்­ரிட் பர­த­நாட்­டி­யம்'

நிகழ்ச்­சி­யின் ஐந்­தாம் பாகத்தை முழு­மை­யா­கத் தயா­ரிப்­ப­தற்கு ஒரு வாரம் ஆன­தா­கக் கூறி­னார்.

"ஐந்து நாள் பயிற்­சிக்­குப் பிறகு காணொளி எடுக்­கத் தொடங்­கி­னேன். ஒரு நாளில் காணொளி எடுத்து அத­னைத் தொகுக்க ஐந்து நாட்­கள் ஆயின," என்று அவர் கூறி­னார்.

ஏ.ஆர். ரஹ்­மான், ஷான் வின்­சன்ட் டி பால், எம்.ஐ.ஏ உள்­ளிட்ட புகழ்­பெற்ற உல­கத் தமிழ்க் கலை­ஞர்­க­ளு­டன் பணி­யாற்­றிய உஷா ஜெய், யங் ராஜா­வு­டன் பணி­யாற்ற விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!