புதிய அத்தியாயத்துக்குள் நுழையும் உள்ளூர் பனிச்சறுக்கு ஹாக்கி அணி

யுகேஷ் கண்­ணன்

சிங்­கப்­பூ­ரின் ஆண்­கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணி தனது இளை­யர் அணியை இம்­மாத இறு­தி­யில், அனைத்­து­லக பனிச்சறுக்கு ஹாக்கி சங்­கம் நடத்­தும் 20 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான ஆசியா மற்­றும் ஓஷி­யா­னியா வெற்­றி­யா­ளர்

போட்­டிக்கு அனுப்ப இருக்­கிறது.

இந்த இளை­யர் அணி அனைத்­து­ல­கப் போட்­டி­களில் பங்­கேற்­பது இதுவே முதல்­முறை.

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் நடக்­க­வி­ருந்த இப்­போட்டி கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இப்­போட்டி நேற்று தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் தொடங்கி அடுத்த மாதம் 2ஆம் தேதி நிறை­வ­டை­கிறது. சிங்­கப்­பூர், ஹாங்­காங்,

இந்­தியா, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­கள் ‘பி’ பிரி­வில் இடம்­பெ­று­ கின்­றன. மலே­சியா, பிலிப்­பீன்ஸ், தாய்­லாந்து, ஐக்­கிய அரபு

சிற்­ற­ர­சு­கள் ஆகிய குழுக்­கள் ‘ஏ’ பிரி­வில் போட்­டி­யி­டு­கின்­றன.

இந்­தோ­னீ­சி­ய அணியுடன் சிங்­கப்பூர் அணி நேற்று மோதி­யது. இன்று இந்­தி­யா­வு­ட­னும் 28ஆம் தேதி தாய்­லாந்­து­ட­னும் அது போட்­டி­யி­டு­கிறது.

இப்­போட்­டி­யில் சிங்­கப்­பூரைப் பிர­தி­நி­திக்­கும் 16 வயது

முத்­துக்­கு­மார் கார்த்­தி­கே­யன், இளம் வய­தி­லேயே நாட்­டுக்­

கா­கக்­ க­ள­மி­றங்­கும் வாய்ப்பு கிடைத்­தது மிகுந்த மகிழ்ச்­சி­யை­யும் பெரு­மை­யை­யும் அளிப்­ப­தாக தெரி­வித்­தார்.

ஒன்பது வய­தில் பனிச்சறுக்கு ஹாக்கி விளை­யாட தொடங்­கிய கார்த்­தி­கே­யன், பல போட்­டி­களில் பங்­கேற்று வெற்­றி­க­ளைக் குவித்­துள்­ளார். இவர் இவ்­வாண்டு சிங்­கப்­பூர் ஆண்­கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணி­யின் ஆக இளைய ஆட்­டக்­கார­ராக இணைந்­தார்.

தற்­போது ஆங்­கிலோ சீன தன்­னாட்சிப் பள்­ளி­யில் பயின்று வரும் அவர், பனிச்சறுக்கு ஹாக்கி விளை­யாட்­டில் தாக்­கு­தல்

ஆட்­டக்­கா­ர­ராக விளை­யா­டு­

கி­றார். இனி வரும் ஆண்­டு­

க­ளி­லும் தொடர்ந்து பனிச்சறுக்கு ஹாக்கி விளை­யாட்­டில் ஈடு­ப­டப்­போ­வ­தா­க­வும் எதிர்­கா­லத்­தில் பொரு­ளி­யல் துறை­யில் பணி­பு­ரிய வேண்­டும் என்ற இலக்­கை­ கொண்­டுள்­ள­தா­க­வும் கார்த்­தி­கே­யன் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!