கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோரில் நால்வர் பின்விளைவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆனால், அவர்கள் யாரும் மோசமாக நோய்வாய்ப்படவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருக்கு சொறி, இருதய வலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவை, ஆய்வுகளின்படி பொதுவாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்தான் என்று ஆணையம் குறிப்பிட்டது.
மே மாதம் வரை மொத்தம் 2,792 நோவவேக்ஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன.

