நொவீனாவில் விபத்து, தாவிக் குதித்த ஓட்டுநர்

நொவீனாவில் விபத்து, தாவிக் குதித்த ஓட்டுநர்

1 mins read
4b4bb2a1-af55-45f7-a5d3-fcf45f9d650f
நொவீனாவில் வாகன விபத்து. -

நொவீனாவில் இராவாடி சாலையில் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

அந்த வாகனம், ராயல் ஸ்குவேர் நொவினா கட்டடத்திற்கு அருகே இருந்த நடைபாதைக்குள் புகுந்து கட்டடத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியது.

வாகனத்தின் 48 வயது ஓட்டுநர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்து நடைபாதையில் விழுந்துகிடக்கக் காணப்பட்டார்.

அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.05 மணிக்குத் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.