தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொழிபெயர்ப்பின் தரத்தை மேம்படுத்த பொதுமக்களும் பங்களிக்கலாம்

2 mins read
1629d206-9880-4a43-a544-beafb5c3b952
திரு த. சரவணனிடம் சான்றிதழை வழங்கிய தகவல், தொடர்பு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். படம்: தகவல், தொடர்பு அமைச்சு -

ஹர்­ஷிதா பாலாஜி

சிங்­கப்­பூ­ரில் மொழி­பெ­யர்ப்பு தரத்தை உயர்த்த பொது­மக்­கள் தங்­கள் பங்கை ஆற்­று­வ­தற்கு தொடர்பு தக­வல் அமைச்சு எஸ்ஜி கூட்டு மொழி­பெ­யர்ப்பு (எஸ்­ஜி­டிடி/SGTT) எனும் இணை­யத்­த­ளத்தை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

மொழி­பெ­யர்ப்பு நிபு­ணர்­க­ளு­டன், 'எஸ்­ஜி­டிடி' இணை­யத்­த­ளத்­தில் வழங்­கப்­படும் மொழி­பெ­யர்ப்பு வசதி­ யின் துல்­லி­யத்தை மேம்­ப­டுத்த பொது­மக்­களும் தங்­கள்

'சிங்பா­ஸு­டன்' இணை­யத்­த­ளத்­தில் 'சிட்­டி­சன்' (குடி­மக்­கள்) மொழிப்­பெ­யர்ப்­பா­ளர்­க­ளாக பதிவு செய்து அவர்­க­ளுக்கு தெரிந்த வார்த்­தை­க­ளுக்­கான சரி­யான மொழி­பெ­யர்ப்­பு­களை வழங்­க­லாம்.

ஆங்­கி­லத்­துக்­கும் சீனம், மலாய், தமிழ் ஆகிய அதி­கா­ரத்­துவ மொழி­க­ளுக்­கும் இடை­யி­லான இரு­வழி மொழி­பெ­யர்ப்பு வச­தி­யோடு, மொழி­பெ­யர்ப்பு தொடர்­பான தக­வல்­க­ளை­யும் இந்த இணை­யத்

­த­ளத்­தின்­வழி பொது­மக்­கள் பெற­லாம்.

அறி­முக விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொண்ட தொடர்பு தக­வல் மூத்த துணை

அமைச்­ச­ரும் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு­வின் தலை­வ­ரு­மான திரு டான் கியட் ஹாவ் பல்­லின சமு­தா­ய­மாக விளங்­கும் சிங்­கப்­பூ­ரில் மொழி­பெ­யர்ப்பு ஆற்­றும் இன்­றி­ய­மையா பணி குறித்து உரை­யாற்­றி­னார்.

"மொழி­பெ­யர்ப்­பின் அவ­சி­யத்தை நாம் அனை­வ­ரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கால­கட்­டத்­தில் உணர்ந்­தோம்: பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள், தடுப்­பூ­சித் திட்­டங்­கள் போன்ற தக­வல்­களை விரை­வாக பொது­மக்­க­ளி­டத்­தில், குறிப்­பாக மூத்த தலை­மு­றை­யி­ன­ரி­டத்­தில், சென்று சேர்க்க உத­வும் முக்­கிய கருவி மொழி­பெ­யர்ப்­பா­கும். அவ்­வா­றி­ருக்க, அதற்­கு­ரிய வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கம் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும்," என்­றார் திரு டான்.

இணை­யத்­த­ளத்­தின் ஆரம்­ப­கட்ட சோதனை காலத்­தில் அதன் வச­தி­களை மேம்­ப­டுத்த உத­விய 'எஸ்­ஜி­டிடி நண்­பர்­கள்' கல்­வி­யா­ளர் லோ மியாவ் சியாங், முன்­னாள் 'பெரித்தா ஹரி­யான்' நிரு­பர் திரு ஸுல்­கி­ஃப்லி ரஹ்­மத், ஊட­கத்­துறை நிபு­ணர் திரு த. சர­வ­ணன், மொழி­பெ­யர்ப்பு ஆர்­வ­லர்­கள் திரு டான் மெங் ஹாவ், அயிஷா லியானா ஆகிய ஐவ­ரின் பங்களிப்பை­யும் திரு டான் பாராட்­டி­னார்.

கடந்த மூன்­றாண்­டு­க­ளாக மொழி­பெ­யர்ப்பு துறை­யில் பணி­யாற்றி வரும் 49 வயது திரு சர­வ­ணன் மொழி ஆர்­வ­லர்­கள், மொழி சார்ந்த துறை­களில் பணி­யாற்­று­

ப­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் ஆகி­யோருக்கு இவ்­வி­ணை­யத்­த­ளம் பெரி­தும் உத­வும் என்­றார்.

"இக்­க­ரு­வி­யைப் பயன்­ப­டுத்த பயன்­ப­டுத்த, அது வழங்­கக்­கூ­டிய தக­வல்­க­ளின் துல்­லி­யம் மேம்­படும். மொழி­பெ­யர்ப்பு நிபு­ணர்­களும் 'சிட்­டி­சன்' மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களும் தங்­க­ளுக்கு தெரிந்­த­வற்றை தொடர்ந்து இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­யும்­போ­தும் தவ­றான மொழி­பெ­யர்ப்­பு­களை சரி­செய்­யும்­போ­தும் இணை­யத்­த­ளம் மேம்­படும். ஆகை­யால், மேலும் பலர் இத்­த­ளத்­தைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும், பய­ன­டை­ய­வேண்­டும்," என்­றார் திரு சர­வ­ணன்.

"இவ்­வி­ணை­யத்­த­ளத்தை தொடர்ந்து மேம்­ப­டுத்­து­வ­தற்­காக விரை­வில் சமூக கருத்­துத்­த­ளம் ஒன்­றை­யும் நாங்­கள் அறி­மு­கப்­

ப­டுத்­த­வி­ருக்­கி­றோம். இதன்வழி­யாக திரட்­டப்­படும் மக்­க­ளின் கருத்­து­க­ளுக்­கேற்ப இணை­யத்­த­ளத்­தில் வழங்­கப்­படும் சேவை­களை மெரு­கூட்­டு­வோம்" என்­றார் தொடர்பு தக­வல் அமைச்­சின் மொழி­பெ­யர்ப்­புப் பிரிவு நிர்­வாகி கௌரி கன­க­ராஜா, 27.